பக்கம்:திருக்கோலம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் எழுதிய வடிவம் 23.

கலவைச் சந்தனத்தையுடைய அபிராமவல்லி காதில் அணிந்த முத்துக் கொப்பையும், வயிரக் குழையையும், திருவிழியின் செழுமையான கடைசியையும், பவளம் போன்ற இதழ்களையும், அவற்றினிடையே மலர்ந்த நிலவு போன்ற புன்னகையையும் என் இரண்டு கண்களிலும் எழுதி: வைத்தேன்.

பொதுவாகச் செப்பு என்ருலும், பின்னே தங்கக் கலசத்தைச் சொன்னமையால் தந்தச் செப்பைக் கொள்வது சிறப்பு. நகிலே அடையாகச் சொன்னலும் அவையும் அவருடைய விழியில் நிற்பனவாகக் கொள்ளவேண்டும். குழை என்பது தளிருக்குப் பெயர். பழங்காலத்தில் பெண்கள் தம் காதில் அசோகந்தளிர் முதலிய தளிர்களே அணிந் தார்கள். நாளடைவில் பொன்னும் மணியும் கொண்டு செய்த காதணி வந்தபோது அதையும் குழையென்றே சொன்னர்கள். அதல்ை குழை என்பது காதணி என்ற பொருளிலே வழங்குகிறது. விழிக்கடைக்குக் கொழுமை, கருணே நிரம்பியிருத்தல், -

துப்பு-பவளம்; இங்கே இதழுக்கு ஆயிற்று; அப்படியே நிலவு, புன்சிரிப்புக்கு ஆயிற்று; இரண்டும் உவம ஆகு பெயர்கள். துணைவிழி-இரண்டு கண்கள். விழிக்கே-விழியில்; உருபு மயக்கம்.) . . . : . . . .

அம்பிகையின் வடிவைத் தியானச்சிறப்பினல் புறத்தும் பார்க்கலாம் என்பது கருத்து. . . . . . . . . . . . . . . .

இது அபிராமி அந்தாதியில் 78-ஆவது urరG. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/33&oldid=577972" இலிருந்து மீள்விக்கப்பட்டது