பக்கம்:திருக்கோலம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருக்கோலம்

நன்கு வாழ்பவன் மனம் அமைதியாக இருக்கும். எம் பெருமாட்டியை எண்ணி அறிம் செய்து, அவள் அருளை முன்னிட்டுக் கொண்டு பொருள் ஈட்டி, அவள் அருளே மறவாமல் மனேவியோடு வாழ்ந்தால் அந்த அருளே நமக்கு வீடு என்னும் பேரின்ப வாழ்வைக் கொடுக்கும்.

அபிராமி அம்மை, நல்ல முறையில் வாழ்ந்து தன்னே வழிபடும் அன்பர்களுக்கு எல்லா நன்மைகளேயும் த ருவாள். அவளே நேராகக் கொண்டுவந்து தருவாள் என்பது இல்லை. அவள் தன் அருட்கண்ணுல் பணித்தால் போதும்; நமக்குச் 5Fö語6km} சௌபாக்கியங்களும் வந்து சேரும்,

‘இவன் என் பக்தன் இவனுக்குக் கல்வியைத் தருவாயாக’ என்று தன் கடைக்கண்ணில்ை கலைமகளுக் குக் குறிப்பித்தால் போதும்; வாய் திறந்து சொல்ல வேண்டியதில்லை. உடனே கலைமகள் நமக்குச் சிறந்த கல்வி யறிவை வழங்குவாள். மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தம்முடைய குறிப்பினலே மற்றவர்களுக்கு ஏவல் இடு. வார்கள். -

என் ஆசிரியப்பிரானுகிய டாக்டர் மகாமகோபாத்தி, யாய ஐயரவர்கள், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞான சிரியராக இருந்த அம்பலவான தேசிகரைப்பற்றி ஒன்று சொல்வார்கள். அவர் மிகச் சிறந்த அறிவு பெற்றவர். மடத்துக்கு யாரேனும் வந்தால் அவர்களே வரவேற்று உபசரிப்பது வழக்கம். வெவ்வேறு பதவியில் வெவ்வேறு பணியாளர்கள் இருப்பார்கள். .

வருகிறவர்கள் பல திறப்பட்டவர்கள். அதிகாரிகள் வருவார்கள்; செல்வர்கள் வருவார்கள்; சிறந்த புலவர்கள் வருவார்கள். அவரவர்களுக்கு ஏற்றபடி உபசாரம் செய்ய வேண்டும். அதிலும் தரம் அல்லது வரிசை உண்டு அல்லவா? . . . . . * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/36&oldid=577975" இலிருந்து மீள்விக்கப்பட்டது