பக்கம்:திருக்கோலம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன உறவு? 27.

அப்படி வருகிறவர்களுக்குஇன்ன இன்னவாறு உபசாரம் செய்ய வேண்டுமென்று ஆதீனத்தலைவர் விரிவாகச் சொல்ல மாட்டார்; குறிப்பாகப் புலப்படுத்துவார். அந்தக் குறிப்பை உணர்ந்து பணியாளர்கள் ஆவன செய்வார்கள்.

கைலெக்டர் வந்திருக்கிறர்?’ என்று மடத்தின் பணி யாளர் வந்து சொல்வார். ‘. . . .

"அப்படியா? சரி? என்பார் தலைவர். அப்படிச் சொல் வதிலேயே அவருக்கு எந்த வகை உபசாரத்தைச் செய்ய வேண்டுமென்பதைப் பணியாளர் தெரிந்துகொள்வார்.

வைக்கீல் ஐயா வந்திருக்கிறர்?’ என்பார் பணியாளர்.

வேரட்டும்’ என்பார் பண்டாரசந்நிதிகள். அதற்கு ஒர் அர்த்தம் உண்டு. அதன்படி வரவேற்பு நடக்கும்.

'இன்ன ஜமீன்தார் வந்திருக்கிருர்’ என்று சொன்னல், தலைவர் காலே மாற்றி உட்காருவார். அதிலிருந்து பணி யாளர் குறிப்பை உணர்ந்துகொண்டு அந்த ஜமீன்தாரை வரவேற்பார், . . . . . .

இவ்வாறு குறிப்பிப்பதும் அதை உணர்ந்து செய்வதும் இரு சாராருடைய இயல்பையும் பொறுத்திருப்பவை.

அம்பிகை எல்லோருக்கும் மேலான நிலையில் இருப் பவள். அவளுடைய ஆணைக்கு அடங்கி எல்லாத் தேவர் களும் தம் தம் தொழிலச் செய்துவருகிருர்கள். தன்னிடம் அன்பு செய்யும் பக்தர்களுக்கு அநுக்கிரகம் செய்யவேண்டும் என்று அம்பிகை திருவுள்ளம் கொண்டால் போதும். அன்பர்களுக்கு என்ன வேண்டுமோ அதைத் தருவதற்கு அவள் முயன்று ஒன்றும் செய்யவேண்டியதில்லை. திருவுள் ளத்தில் எழுந்த அருகாக் கண்ணுல் காட்டினல் போதும். அவளுடைய ஏவலேச் செய்கிறவர்கள். அந்தக் குறிப்பை உணர்ந்துகொண்டு. அன்பர்களுக்கு வேண்டியவற்றைத் தருவார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/37&oldid=577976" இலிருந்து மீள்விக்கப்பட்டது