பக்கம்:திருக்கோலம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருக்கோலம்

அம்பிகைக்குத் தன் அன்பர்களுக்கு வேண்டியவற்றை வழங்கவேண்டும் என்ற கருணை நிரம்ப உண்டு, அந்த அருளை வெளிவிடும் மடையாகத் திருவிழிகள் இருக் கின்றன. -

விழிக்கே அருள் உண்டு, அபிராமவல்லிக்கு.

அந்த விழிகளின் குறிப்பை உணர்ந்து கலைமகள் கல்வி அறிவை வழங்குவாள்; திருமகள் செல்வத்தை வழங்கு வாள்; மற்ற மற்றத் தேவர்கள் தம்மால் ஆகும் நலங்களே யெல்லாம் செய்வார்கள். மின்சாரத்தில்ை இயங்கும் விசிறி முதலிய பல கருவிகள் வீட்டில் உள்ளன. மூல ஸ்விட் சைப் போட்டால் எல்லாம் எப்படி எப்படி இயங்க வேண்டுமோ அப்படி அப்படி இயங்கும். அபிராமவல்லி யின் விழியருளும் அத்தகையதுதான். அந்த விழியின் அருட் குறிப்புக் கிடைத்துவிட்டால் எல்லாம் நிரம்பும்,

ஆனல் அந்த அருளைப் பெறவேண்டுமே! எம்பெரு மாட்டியின் திருவுள்ளம் உவக்குமால்ை அருள் பொங்கும். அது அவள் விழியின்வழியே ஊற்றெடுக்கும். அன்னையின் திருவுள்ளம் உவக்கும்படி ஒழுகுவது எப்படி?

இந்த உலகில் வாழவேண்டிய முறையில் வாழ்ந்து அவளுக்கு அடிமையாகி இடையீடுபடாத அன்பு செய்தால் அவளுடைய திருவுள்ளம் குளிரும்; அருள் வெளிப்படும்,

உலகில் வாழவேண்டிய முறை எது? அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருள்களையும் அடையும் வழியை நமக்கு அறிவிப்பது வேதம். இந்தியா வில் பல பல சமயங்கள் இருந்தாலும், இந்த நாட்டுக்கே உரிய சமயங்களுக்கெல்லாம் அடிப்படை நூலாக இருப்பது வேதம். அது யார் யார் எப்படி ஒழுகவேண்டும், எதை எதைச் செய்யவேண்டும், எவற்றைச் செய்யக் கூடாது என்பவற்றை வரையறையாகச் சொல்வது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/38&oldid=577977" இலிருந்து மீள்விக்கப்பட்டது