பக்கம்:திருக்கோலம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன உறவு? - 29.

செய்ய வேண்டியதை விதித்தும் செய்யத் தகாதவற்றை விலக்கியும் வழிகாட்டுகிறது. வேதம் சொன்ன வழியே நடப்பது இந்துக்களின் கடமை. சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று உபாசன வகையில்ை வெவ்வேறு சமயங்கள்

இந்த நாட்டில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஆதார மாக இருப்பது வேதம். அதல்ை எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு பெயர் சொல்ல வேண்டுமானுல் இந்து மதம் என்று சொல்கிருேம். அது பிற்காலத்தில் வந்த பெயர். வைதிக மார்க்கம் என்று சொல்வது பொருந்தும், அதையே வேதநெறி என்று கூறுவார்கள். அந்த நெறிக்குள் சைவம், வைஷ்ணவம் முதலிய கிளைகள் அல்லது துறைகள்

பல இருக்கின்றன.

இந்துக்கள் வாழும் நெறியைக் காட்டுவது வேதம். இனிப் புதியதாக ஒரு நூலப் படைக்க வேண்டிய அவசியம் இல்இல், மிகமிகப் பழைய காலம் முதற்கொண்டு வேதம் இந்த நாட்டுக்கு வழி காட்டி வருகிறது. இறைவி எப்படி அநாதியோ அப்படியே வேதமும் அநாதி. -

ஆதலால் யார் செல்வதைக் கேட்டால் நல்லது என்ற கேள்விக்கே இடம் இல்லே, அவரவர்கள் எப்படி எப்படி நடக்க வேண்டும் என்பதை வேதம் சொல்கிறது; கட்டளை யிடுகிறது; எசமான் தன் ஏவலாளர்களுக்கு இப்படிச் செய், இப்படிச் செய்யாதே என்று கட்டளையிடுவதுபோல விதிநிஷேதங்களேச் சொல்கிறது. அதைத் தெரிந்து அதன் படி நடப்பது நம் கடமை. இவ்வாறு கட்டளையிடுவதால் வேதத்தைப் பிரபு ஸம்மிதை என்று சொல்வார்கள்.

வேதம் இருக்கிறது; அது சொல்லும் நெறி இருக் கிறது; அந்த நெறியில் சென்று பயன் பெற்றவர்களும் இருக்கிறர்கள். எல்லாருமே வேத நெறிப்படியே ஒழுகு கிருர்கள் என்று சொல்ல இயலாது. உலகில் நல்லவர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/39&oldid=577978" இலிருந்து மீள்விக்கப்பட்டது