பக்கம்:திருக்கோலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 திருக்கோலம்

இருக்கிருர்கள்; பொல்லாதவர்களும் இருக்கிறர்கள். நல்ல நெறியில் செல்கிறவர் சிலர்; தீய வழியில் நடப்பவர் பலர். இறைவியின் பக்தர்கள் நல்ல நெறியில் நடப்பவர்கள்; வேதம் சொன்ன வழியில் ஒழுகுகிறவர்கள்: அதன்படியே நடக்க வேண்டும் என்ற உள்ளம் உடையவர்கள்; அம்பிகையை வேத நெறிப்படி வழிபடுகிறர்கள். அதல்ை அவர்கள் அறம், பொருள், இன்பம் என்பவற்றைப் பெற்று, வீடு அடையும் தகுதியையும் பெறுகிருர் கள், அன்னேயின் அருள் அவர்களுக்குக் கிடைக்கிறது. - இந்தக் கருத்தைச் சொல்கிருர் அபிராமிபட்டர்.

விழிக்கே அருள் உண்டு

அபிராமவல்லிக்கு; வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு .

எமக்கு. +.

  • தம்மைப் போன்ற அன்பர்களையும் சேர்த்துச் சொல்வ

தஞல், எமக்கு’’ என்கிருர்,

இந்தக் கூட்டத்தினர் செல்லும் வழி வேதமார்க்கம். இவர்கள் பெறுவது அன்னையின் அருள். அதல்ை இன்ப வாழ்வு அமைகின்றது. -

உலகில் இந்தக் கூட்டத்தினரே நிரம்பியிருக்கிருர்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் செல்லும் வழிக்கு மாருன வழியில் செல்வோர் பலர் இருக்கின்றனர். நல்ல வழி இல்லாமற். போனதால்தான் அவர்கள் கெட்ட வழியிலே செல்கிறர்கள் என்று சொல்ல நியாயம் இல்லை. நல்ல வழியாகிய வேத வழி இருக்கிறது. அதில் உள்ளம் வைத்து நடக்கின்ற அன்பர்களும் இருக்கிருர்கள். அவர்கள் அன்னையின் திருவருளுக்கு ஆளாகிருர்கள். ‘. . .

அந்த வழி இருக்கவும், பலர் அந்த வழியிலே செல்வ தில்லை. அவர்கள் இழிகுணமுடையவர்கள்; கயவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/40&oldid=577979" இலிருந்து மீள்விக்கப்பட்டது