பக்கம்:திருக்கோலம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன உறவு? 31

இவ்வுலகத்தில் அவர்கள் செய்யும் தீய செயல்களால் பலருக் குத் துன்பம் உண்டாகிறது. அதல்ை அவர்களைப் பலரும் பழிக்கிறர்கள். புகழுக்குரிய செயல்களைச் செய்வது நல்ல இயல்பு. புகழெனின் உயிரும் கொடுப்பர்: அவர்கள். ஆனல் கயவர்களோ பழி வருமே என்று எண்ண மாட்டார்கள்; தீய செயல்களைச் செய்து பழியைக் கட்டிக் கொள்வார்கள். பழி வந்த பின்பேனும் அதைச் செய்யக் கூடாது என்ற உணர்ச்சி வருகிறதா? மேலும் மேலும் பழி உண்டாகும்படியான இழி செயல்களையே செய்து அவற்றிலே சுழன்று சுழன்று உழன்றுகொண்டிருப்

பார்கள். . -

அவ்வழி கிடக்கப்பழிக்கே சுழன்று.

மனிதன் தவறு செய்யப் புகுந்தால் அவன் நெஞ்சம் வேண்டாம் என்று தடுக்கும். பிறர் பழிப்பார்களே என்ற அச்சம் உண்டாகும். ஆல்ை ஒரு முறை தவறு செய்து விட்டால் பிறகு தடுப்பது அரிதாகிவிடும். திரும்பத் திரும்ப அந்தத் தவற்றையே செய்துகொண்டிருப்பான்; அதிலே விழுந்து சுழலுவான் கரையேற முயலமாட்டான். -

பழிமட்டுமா? அவன் பாவச் செயல்கள் பல செய்வான். எல்லாப் பாவச் செயல்களும் பழியை உண்டாக்குவதில்லை. எல்லாப் பழிச்செயல்களும் பாவத்தை உண்டாக்குவதில்லை தன் கையில் உள்ள பொருளைக் கொண்டு கோயிலே ஒருவன் கட்டுகிறன். அவனைச் சிலர் பழிக்கக்கூடும். ஆனல் அவன் செய்வது புண்ணியச் செயலே. நல்லோர் பழித்தால் அது தவருண செயலாகத்தான் இருக்கும். அல்லாதவர்கள் பழித்தால் அது தீய செயலாகத்தான் இருக்குமென்று சொல்ல இயலாது. . . . . . . ..

9అమితా அறியாமல் தீய செயலே ஒருவன் செய்தால் அவனுக்குப் பழி வராது. பிறர் அறிந்து தவறு செய்கிருன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/41&oldid=577980" இலிருந்து மீள்விக்கப்பட்டது