பக்கம்:திருக்கோலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 . திருக்கோலம்

என்று சொல்வதுதானே பழி? பிறர் அறியாமல் தீய செய்ல் செய்வதல்ை பழி உண்டாகாவிட்டாலும் நிச்சய மாகப் பாவம் உண்டாகும். *

கயவர்களில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் பாவத் துக்கு அஞ்சாவிட்டாலும் பழிக்கு அஞ்சுவார்கள். பழிக்கே. அஞ்சாதவர்கள் பாவத்திற்குச் சிறிதும் அஞ்சமாட்டார்கள். அவர்கள் கொடிய பாவச் செயல் காேச் செய்வார்கள்.

வெம்பாவங்களே செய்து.

சூழும். இதன் பயனுக மறுமையிலே அவர்கள் பாழான நரகக் குழியிலே ஆழ்வார்கள்; எல்லாத் துன்பங்களினும் மேலான துன்பங்களே அடைவார்கள்.

இம்மை, மறுமை, வீடு என்று உயிர்கள் வாழும் நில்கள் மூன்று. இந்த உலக வாழ்வை இம்மை என்பர். இங்கே மிகுதியான புண்ணியச் செயல்களைச் செய்தவர்கள் இந்தப் பிறவிக்குப்பின் சொர்க்கேோக வாழ்வைப் பெறுவார்கள்;. பாவச் செயலைச் செய்தவர்கள் நாக வாழ்வைப் பெறு வார்கள். இந்த இருவகையும் மறுமை எனப்படும். என்றும் மாருத பேரின்ப வாழ்வே வீடு அல்லது முக்தி.

வீடு என்ற சொல்லுக்கு விடுதலே என்று பொருள். முக்தி என்ற வடசொல்லும் அந்தப் பொருளுடையதே. இஜன்கள், சுகதுக்கங்கள், சரீரங்கள் ஆகியவற்றினின்றும் விடுபடுவதனுல் வீடு என்ற பெயர் வந்தது. அது இன்பமே பன்றி வேறில்லாத நிலை; இறைவியோடு ஒன்றுபடும் நிலே,

பழியும் பாவமும் செய்கிறவர்கள் இம்மையிலும் துன்புறுவார்கள்; மறுமையிலும் நரக வாழ்வை அடை வார்க்ள்; அந்த நரகத்தில் நெடுங்காலம் அழுந்திக் கிடப் பார்கள். மிகவும் கொடிய குற்றத்தைச் செய்தவர்களுக்கு. நீண்ட சிறைவாசம் கிடைப்பதுபோல, இந்த வெம்பாவங்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/42&oldid=577981" இலிருந்து மீள்விக்கப்பட்டது