பக்கம்:திருக்கோலம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன உறவு? ៖

களைச் செய்யும் கயவர்கள் எளிதில் மீண்டு வர முடியாதபடி நரகக்குழியிலே அழுந்திக் கிடப்பார்கள். - பழிக்கே உழன்று வெம்பாவங்களே

செய்து பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர். நல்ல வழியில் நடப்பவர்கள் தம்முடைய வழியில் நடப்பவர்களேயே துணையாகக் கொள்ளவேண்டும். மனிதன் சமுதாய விலங்கு என்று சொல்லப்படுகிருன். அவன் எந்தச் சமுதாயத்திலே பழகுகிருகுே அதற்கு ஏற்றபடி அவனு டைய குணங்களும் செயல்களும் அமையும். சேரிடம் அறிந்து சேர்?’ என்று ஒளவைப்பாட்டி சொன்னாள். பொல்லாதவர்களோடு சேர்ந்தால் நம்முடைய நன் முயற்சிகள் யாவும் வீணுகிவிடும்,

விளக்கை ஏற்றுவது பெரிதன்று; அந்த விளக்கு. அணையாமல் பாதுகாக்க வேண்டும். நல்ல நெறியில் செல் கிறவர்கள், அதற்கு மாருன வழியில் செல்பவரோடு இணங்குவது தீமையை உண்டாக்கும். பொல்லாதவர் களைக் காணுத தூரத்தில் நீங்கிவிட வேண்டும், - நல்லவர் இணக்கம் குறைவாக இருந்தாலும் குற்றம் இல்லை. எப்படியோ தத்தித் தள்ளாடி முன்னுக்கு வர முயலலாம், பொல்லாதவர்கள் இணக்கம் இருந்தால் நம்மைக் கீழே இழுத்துக் கெடுத்துவிடுவார்கள். அதனுல் தான் பெரியவர்கள் சத்சங்கத்தை வற்புறுத்துவார்கள்; அல்லாதார் கூட்டத்தில் சேரக்கூடாது என்று சொல் வார்கள். • . -

ஒருமையுடன் நினது திருவடிமலர் நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்.

உறவுகல வாமை வேண்டும்?? என்று வேண்டுவார் இராமலிங்க வள்ளலார்,

8 - يوم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/43&oldid=577982" இலிருந்து மீள்விக்கப்பட்டது