பக்கம்:திருக்கோலம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 'திருக்கோல்ம்

ஆகவே, வேத நெறியின்படி நடக்கவேண்டும் என்ற விருப்பமுள்ள மனம் உடையவர்கள் அபிராமவல்லியின் அருளைப் பெறுவார்கள்; திய நெறியிற் சென்று பழி பாவங் ஆஜா , சுமக்கின்ற கயவருடைய -2வில் விரும்பமாட் டார்கள்; முன்னை நிலையில் அத்தகையவர்களோடு பழகும் சந்தர்ப்பம் இருந்தாலும் வேத வழி யி ல் செல்லத் தொடங்கிய பிறகு அவர்கள் பக்கத்திலே எட் டிப் பார்க்க மாட்டார்கள்; இப்போது அவர்களுக்கும் நமக்கும் ஓர் உறவும் இல்லை’ என்ற உறுதிப்பாட்டோடு இருப் பார்கள். - - ;

கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே?

உயர்ந்தவர்கள் கூட்டுறவில்ை நல்லகுணங்கள் நிரம்பும். ஒருவரிடம் ஒரு பொருள் இல்லையென்றல் அந்தப் பொருள் உள்ளவரோடு கூட்டுச் சேர்ந்தால் அவர்கள் தம்மிடம் உள்ள பொருங் மற்றவருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். அந்தக் கூட்டினுல் அவருக்குப் பயன் உண்டு. நல்லவர் களோடு கூட்டு உண்டானல் அவர்களுடையநல் லகுணங்கள் நம்மிடம் படியும். கயவர்கள் கூட்டு உண்டால்ை நம்மிடம் உள்ள நல்ல குணங்கள் பறிபோய்விடுவதோடு அவர் களுடைய தீய குணங்கள் நம்மிடம் குடியேறிவிடும். ஆகவே, அத்தகையவர்களுடைய கூட்டு நமக்கு எதற்கு? அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட் கிருர் அபிராமியட்டர். r

விழிக்கே அருள் உண்டு அபிராம

- வல்லிக்கு; வேதம்சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு

எமக்கு அவ் வழிகிடக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/44&oldid=577983" இலிருந்து மீள்விக்கப்பட்டது