பக்கம்:திருக்கோலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன உறவு? 35

பழிக்கே உழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர்தம்

மோடுஎன்ன கூட்டு இனியே?

(அபிராமவல்லிக்குத் திருவிழியால் எமக்கு வழங்கும் திருவருள் இருக்கிறது; அவ்வருளே அடையும் பொருட்டு வேதம் சொன்ன நெறியில் அவளே வழிபட எமக்குத் துணையாக நெஞ்சு இருக்கிறது; அந்த நல்ல வழி இருக்கவும், பழிச்செயல்களிலே உழன்று திரிந்து, கொடிய பாவச் செயல் கன்யே செய்து அதன் பயனுகப் பாழான நரகக் குழியிலே அழுந்த இருக்கும் இழிந்தவர்களோடு இப்போது எமக்கு என்ன உறவு இருக்கிறது? -

விழிக்கே-விழியில்; உருபுமயக்கம், வழிக்கே-வழியில். எம்முடைய நெஞ்சம் எமக்கு உறுதுணையாக இருக்கிறது என்றபடி, மனத்துக்கண் மாசில குதல் அனைத்தறன்: என்பார்களாதலால், யாம் செய்வது உள்ளத்தோடு ஒட்டிய வழிபாடு என்று இதல்ை புலப்படுத்தினர். பழி-பழியை உண்டாக்கும் செயல்கள்; பாவங்கள். பாவத்தை உண்டாக்கும் செயல்கள்; இவை இரண்டும் ஆகு பெயர்கள். நரகத்தில் நல்வாழ்வு இல்லாமையால் பாழ் நரகம் என்றர். தன்பால் விழுந்தவரை எளிதில் மேலெழச் செய்யாததர்தலின் நரகக்குழி என்ருர். கயவர். இழிகுணமும் இழிசெயலும் உடையவர்கள். கூட்டுதொடர்பு; உறவு. இனி-இப்போது; இனிமேல் என்றும் சொல்லலாம்.) " . . . .

o இது அபிராமி அந்தாதியில் 79ஆம் பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/45&oldid=577984" இலிருந்து மீள்விக்கப்பட்டது