பக்கம்:திருக்கோலம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்!

கையவர்களோடு எனக்கு என்ன உறவு?’ என்று கேட்ட அபிராமிபட்டர், தாம் யாரோடு உறவாடினர் என்பதை அடுத்தபடி நினைக்கிருர். அவராகத் தேர்ந் தெடுத்து நல்லவர்களோடு கூடினரா? இல்லே, இல்லை; இங்கேய்ே அவருக்கு ஏற்ற சங்கத்தில் அவரைச் சேர்த்து விட்டாளாம். பக்தர்கள் இப்படித்தான் எண்ணுவார்கள். நான் அடியார்களோடு சேர்ந்தேன்; நான் அம்பிகையை வழிபட்டேன்’ என்று சொல்லமாட்டார்கள். -

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஒட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் கானு தாரே

காண்பார்.ஆர் கண்ணுதலாய்க்காட்டாக்காலே’’ என்று அருளாளராகிய அப்பர் கூறுவார். எல்லாம் அவள் செயல்’ என்று எண்ணி அகந்தை ஒழிந்து நிற்பவர் இந்த ஆசிரியர். ஆகவே தாம் இறைவியின் அருளேப் பெறுவதற்குக் காரணமாக இருந்த சத்சங்கத்தை நினைக் கிருர், அந்த அடியார் கூட்டுறவை அம்பிகைதான் கூட்டு வித்தாள், அது வியப்புக்கு உரிய செயல் என்று சொல் கிருர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/46&oldid=577985" இலிருந்து மீள்விக்கப்பட்டது