பக்கம்:திருக்கோலம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருக்கோலம் ,

கூட்டியவா என்னேத் தன் அடியாரில்!

என்னத் தன் அடியாரோடு கூட்டியவாறு என்ன ஆச்சரியம்!’ என்பது இதன் பொருள் மற்ற இடத்தில் கூட்டியதைவிடத் தன் அடியாரோடு கூட்டிேைள, அது தான் அதிசயம். ஏன்? அடியார்களின் பண்புகளே அன்னே நன்கு உணர்வாள். அவர்களுடைய தூய்மையைக் கெடுக் காமல் பாதுகாக்கும் திருவுள்ளம் கொண்டவள். ஆகவே, அவர்களுடைய உயர்வை அறிந்தும், என்னுடைய இழி நிலையை அறிந்தும், என்னே அவர்களோடு கூடச்செய்து நன்மை பெற வைத்தாள். இது எத்தனை வியப்பான காரியம்!’ என்று எண் ணி வியக்கிருர்,

'நான் கொடிய பாவங்களேச் செய்தவன், அடியவர் களோ பாவமே தெரியாத தூயவர்கள், பாவங்களி னின்றும் நீங்கித் தூயவனை பிறகே நான் அவர்களோடு சேரும் தகுதி உடையவனுவேன். அத்தகைய தகுதி எனத்கு : இல்லை என்ருலும், அன்னே என்னிடம் பேரருள் வைத் தாள். என் கொடிய வினைகளே நீக்கவில்லை. இந்த வினைகள் இருக்கும்போதே அடியார் கூட்டத்தில் என்னேச் சேர்த்து விட்டாள். அப்படிச் சேர்த்தது ஆச்சரியம்! ஒட்டாத இரண்டு பொருளே ஒட்ட வைத்தது போன்ற ஆச்சரியம் அது. ஆனல் அதைவிடப் பெரிய ஆச்சரியம் இப்போது நிகழ்ந்தது என்று சொல்ல வருகிறர். - -

‘என்னை அடியவர்களோடு சேர்த்து வைத்தாள். என்னிடம் இருந்த கொடிய வினைகளே, பாவங்களே ஓடும்படி செய்துவிட்டாள். அது பெரிய ஆச்சரியம் அல்லவா??? -

- - ೨೩urfರ್ಹ கங்கையைப்போலத் தூயவர்கள். அழுக்கு உடைய ஒருவனைக் கங்கையிலே போட்டுவிட்டால் அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/48&oldid=577987" இலிருந்து மீள்விக்கப்பட்டது