பக்கம்:திருக்கோலம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

教0 திருக்கோலம்

ஓடி வந்தாளே; அது எவ்வளவு ஆச்சரியம்!’ என்று சொல்கிருர், - - o

சாக்கடையில் விழுந்த குழந்தையைத் தண்ணிரில் ஆட்டிக் கழுவச்செய்து, உடனே வேகமாகச்சென்று அணைக் கின்ற அன்னேயின் செயலப்போல் இருக்கிறது. இது.

வந்து என்ன செய்தாள்? மாபெரும் வியப்பு! ஒன்றுக் கும் பற்ருத என்னிடம் விரைந்து வந்து தன்னுடைய உண்மையான சொரூபத்தைக் காட்டினளே! அது அதிசயத் திலும் அதிசயம்!’ என்கிருர்,

தன்னே உள்ள வண்ணம் காட்டியவா!

அடியார்களின் உறவில்ை வினைகள் போக, வினைகள் போன தல்ை அன்னையின் அருள் வந்து பதிய, அதல்ை அவளுடைய திவ்ய தரிசனம் கிடைக்கிறது. இதுவரையில் அன்னையைப் பார்த்த பார்வை வேறு. விக்கிரகமாக, படமாக, உருவமாகப் பார்த்த பார்வை அது. இப்போது அம்பிகையின் அகண்டாகார ஸ்வரூப தரிசனம் கிட்டியது. அதலுைண்டான வியப்புக்குக் கங்குகரை இல்லை. இப்போது தான் அம்பிகையின் உண்மையான நிலை தெரிகிறது.

"நின்னே உள்ளவண்ணம், பேயேன் அறியும் அறிவுதந்தாய்; என்ன பேறுபெற்றேன். (6.1) என்று முன்பும் ஒரு முறை அபிராமவல்லியை உள்ள வண்ணம் அறியும் அநுபவம் தமக்குக் கிடைத்ததைச் சொல்லியிருக்கிருர். - - - -

அம்பிகையின் சொரூப தரிசனத்தால் உண்டான ஆனந்த அநுபவம் எல்லா வியப்புக்களிலும் மேலான வியப்பு. அதற்கு மிஞ்சின அதிசயமே இல்லை. அவளுடைய திவ்ய தரிசனத்தை இந்தக் கண்களாலே கானும் பேறு பெற்ருர் இந்த அருளாளர். அதல்ை கண்கள் களித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/50&oldid=577989" இலிருந்து மீள்விக்கப்பட்டது