பக்கம்:திருக்கோலம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்! 41.

கண்வழியே அம்பிகை உள்ளத்தில் புகுந்தாள். இப்போது உள்ளமும் களிக்கிறது. ஒரே ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து விடுகிறர். - * . -

கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா! இதுவரையில் அவர் வேறு, அம்பிகை வேருக இருந் தனர். அடியார்களோடு உறவாடியபோது அவர்கள் செய் வதைப்போலச் செய்தார். கொடிய வினைகள் நீங்கிய பிறகு தம் உடம்பே கனமற்றுப் போனதுபோல உணர்ந் தார். அம்பிகையைக் கண்டபோது அவள் உருவத்தில் கண்ணையும் மனத்தையும் பறிகொடுத்தார். பிறகு-?

இதுவரைக்கும் செய்வது, அநுபவிப்பது என்பன வற்றை உடையவராக இருந்தார். இப்போது அவர் செயலே இழந்தார். காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்ற திரிபுடி போயிற்று. அம்பிகையின் கைப் பாவை ஆகிவிட்டார். அவள் ஆனந்த நடனம் ஆடுகிருள்; அவரும் ஆடுகிறர். அவராக ஆடவில்லை. அவள் ஆட அதல்ை அவர் ஆடுகிருர். அவள் தான் ஆடி அவரையும் ஆட்டுவிக்கிருள். அவள் செயல் தம் செயல் என்ற வேறு பாடு இல்லாமற் போய்விட்டது. அவள் ஆட்டுவிக்கிறபடி யெல்லாம் ஆனந்த நடனம் ஆடுகிறர்.

ஆட்டியவா நடம்!

அடியாரோடு அம்பிகை கூட்டுவிக்க, கூடியது ஒரு செயல். அதனல் கொடிய வினை நீங்கி நின்றது மற்ருெரு செயல். அம்பிகை அவரை அணுக அவளுக்கு நெருக்கமாக இருப்பது பின்னும் ஒரு செயல். அவள் தன் உண்மை வடிவத்தைக் காட்டக் கண்டது அப்பால் உண்டான செயல். கண்ணும் மனமும் களித்தது அநுபவம். செயலேச் செய்யும் கர்த்தாவாக இருந்து, பின்பு அநுபவத்தை நுகரும் போக்தாவாக இருந்தார். முடிவிலே கர்த்தாவும் அன்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/51&oldid=577990" இலிருந்து மீள்விக்கப்பட்டது