பக்கம்:திருக்கோலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்! 43.

காட்டிய வா! கண்ட கண்ணும்

மனமும் களிக்கிறனவா!

ஆட்டிய வாநடம் ஆடகத்

தாமரை ஆரணங்கே

(பொற்ருமரையில் எழுந்தருளியிருக்கும் அரிய அழகி யாகிய தேவி, சிறிதும் தகுதியில்லாத என்னேத் தன் அடியாருள் ஒருவகைச் சேர்த்தருளியவாறும், அவ்வாறு சேர்த்துப் பின் என்னிடமிருந்த கொடிய கன்மங்களேப் போக்கியவாறும், அருள் புரிய என்னிடம் ஓடிவந்தவாறும், தன் திருக்கோலத்தை உள்ளபடியே காட்டியவாறும், அவளைத் தரிசித்து அறிந்த என் கண்ணும் மனமும் ஆனந்த மேலீட்டால் மகிழ்கின்றவாறும், என்னே ஆனந்த நடனம் ஆட்டுவித்தவாறும் என்ன அதிசயம்! - -

கூட்டியவா - கூட்டியவாறு என்ன வியப்பு: இப்படியே ஒட்டியவா, ஒடியவா, காட்டியவா, களிக்கின்றவா, ஆட்டி யவா என்பவற்றிற்கும் பொருள் செய்யவேண்டும். கொடிய வினே - கொடிய பாவங்கள்; கொடிய செயல்கள் என்றும் கொள்ளலாம். என்கண் . என்னிடத்தில். ஓடியவா - ஓடி வந்தவாறு. ஆட்டியவா நடம் - இவ்வாறெல்லாம் என்னே ஆடும்படி செய்தவாறு என்றும் பொருள் கொள்ளலாம். ஆடகம் - பொன்; ஆடகத்தாமரை - சகசிரார கமலம்; அது: ஆறு ஆதாரமும் கடந்து உச்சியில் உள்ளது.

அடியார் கூட்டுறவில்ை வினை அகலும்; வினை அகன்ருல் அம்பிகையின் அருளநுபவம் வாய்க்கும் என்பது கருத்து. z* .

இது அபிராமி அந்தாதியில் 80ஆவது பாட்டு. .

அம்பிகை, சரபோஜி அரசர் பூர்ண மதியைக் காணச் செய்த அற்புதத்தைக் கேட்ட பின்னர்ப் பாடியது இந்தப் பாட்டு என்று சொல்வர். ஆனந்தாதிசயத்தில் பாடப் பெற்றதாகவே இது தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/53&oldid=577992" இலிருந்து மீள்விக்கப்பட்டது