பக்கம்:திருக்கோலம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் தண்ணளி

கங்கையில் நீர் வற்ருமல் ஓடுகிறது. அதிலிருந்து பெரிய பெரிய கால்வாய்களை வெட்டியிருக்கிருர்கள். அந்தக் கால்வாய்களிலிருந்து கிளேக் கால்வாய்கள் பல பிரிந்து செல்கின்றன. அவை பாயும் இடங்களிலெல்லாம் வளம் கொழிக்கின்றது. கால்வாய்களில் நீர் ஓடிக்கொண்டிருப் பதல்ை அங்கங்கே உள்ள கிணறுகளில் ஊற்றெடுத்து நீர் நிறைய இருக்கிறது. பெரிய கால்வாய்கள், சிறிய கால் வாய்கள், கிணறுகள் ஆகிய எல்லாவற்றிலும் நீர்வளம்

இருப்பதற்குக் கங்கையில் வரும் நீரே காரணம்.

ஒருவன் கிணறு உள்ள இடத்தில் இருக்கிருன். அவளுல் நெடுந்துரம் செல்ல முடியாது. அந்தக் கிணற்று நீரில் ஆடுகிருன்; அதையே தாகத்துக்குப் பருகுகிறன்; அதைக் கொண்டே சமையல் செய்கிருன். கிணற்றில் நீர் நிறைய இருக்கவேண்டுமென்ருல் கங்கை நீர் வற்ருமல் இருக்க வேண்டும் என்ற உண்மை அவனுக்குத் தெரியும். கங்கை நீரின் பெருமை தெரிந்தாலும் அவனுக்குக் கிணற்று நீர் தான் கிடைக்கிறது. அவனுடைய ஆற்றலுக்குள் அடங் கியது அதுதான். அவன் கங்கை நீரினல் ஊறும் ஊற்று நீரைத்தான் பருகுகிருன்; அதில்தான் குளிக்கிருன்.

வேறு ஒருவன் சிறிய வாய்க்காலின் கரையில் வாழ் கிருன். அவன் அந்த வாய்க்காலில் நீராடுகிறன்; அந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/54&oldid=577993" இலிருந்து மீள்விக்கப்பட்டது