பக்கம்:திருக்கோலம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னயின் தண்ணளி 45.

தண்ணிரையே பருகுகிருன், கங்கையிலிருந்து தண்ணிர் வருவதை நிறுத்தில்ை அந்த வாய்க்காலில் நீர் வராது.

பெரிய கால்வாயை அடுத்து ஒருவன் வாழ்கிறன். அவன் அந்தக் கால்வாய் நீரில் ஆடுகிருன்; அதையே பருகு, கிருன். அவனுக்குக் கிணற்று நீர் தேவையில்லை; சிறிய வாய்க்கால் நீரும் தேவை இல்லை; அவற்றைத் தேடிப்போக, வேண்டிய அவசியம் இல்லே; என்ருலும் கங்கையாற்று. நீரைக் கால்வாயில் விடாமல் அடைத்துவிட்டால் அவல்ை நீராட இயலாது. - - .

கங்கைக் கரையிலே ஒருவன் வாழ்கிருன்; நினைத்தால் அவன் அந்தப் பெரிய ஆற்றிலே நீராடலாம்; நீந்தி விளை யாடலாம்; தோணி ஒட்டி உல்லாசமாகப் போகலாம்; அந்த நீரைப் பருகலாம்; அதைக் கொண்டு சமையல் செய்யலாம். -”

கிணற்றங்கரையில் வாழ்ந்தவன் கங்கைக்கரைக்கே வந்துவிடுகிருன், பிறகு அவனுக்குக் கிணற்றை நாட வேண்டிய அவசியம் இல்லை; நூற்றுக் கணக்காக உள்ள சிறிய வாய்க்கால்களே நாடிப் போய் நீராட வேண்டிய தில்லை; வெவ்வேறிடங்களில் பிரிந்து செல்லும் பல பெரிய கால்வாய்களே அனுகவும் தேவையில்லை. அவன்தான் கங்கைக்கரைக்கே வந்துவிட்டானே! அவனுக்கு மற்ற நீர் நிலைக&ாப்பற்றிய கவலே எதற்கு?

அம்பிகையை வழிபட்டு அவளுடைய திருவருளுக்குப் பாத்திரமானவர்கள் அத்தகையவர்கள். அவர்களுக்கு மற்றத் தெய்வங்களிடம் நாட்டம் செல்லாது. எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவியாக இருக்கிறவள் அம்பிகை; எல்லாத் தெய்வங்களும் தத்தமக்கு வரையறுக்கப்பட்ட எல்இலக்குள் நின்று செயல்படும்படி செய்கிறவள் அன்னே. அவளுடைய ஆணையில்ை எல்லாம் நடைபெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/55&oldid=577994" இலிருந்து மீள்விக்கப்பட்டது