பக்கம்:திருக்கோலம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் தண்ணளி 49

நம்முடைய பக்குவம் விரைவாக உயரும். அத்தகையவர் களைக் கண்டால் அவர்களோடு நட்புக்கொள்ளவேண்டும்; பிணங்கக் கூடாது. இதை அபிராமி பட்டர் சொல்ல வருகிருர். -

அன்னேயின் திருவருள் பெற்ற அநுபூதிமான்கள் எப்படி இருப்பார்கள்? தம்முடையவை எல்லாவற்றையும் அவளுக்கே அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப் பார்கள்.

'உனக்கே பரமென் றளித்துவிட்டேன்??

என்று இவ்வாசிரியரே சொல்லியிருக்கிறர். எல்லாவற்றை யும் அன்னேயிடம் அர்ப்பணம் செய்தவர்களுக்குக் கவலே ஏது?

மிகச் சிறிய பருக்கைக் கல்லே ஒரு குளத்தில் போட் டால் அது நீரில் அமிழ்ந்து விடும். ஆல்ை பெரிய பாறை ஒன்றைக் கொண்டுவந்து நீரில் மிதக்கும் கட்டையின்மேல் வைத்தால் அந்தப் பாறை நீரில் ஆழாது; சார்பில்ை உண் டான பெருமை இது. அப்படி, எல்லாவற்றையும், உண் னுடையவை’ என்று அன்னேயிடம் சமர்ப்பித்துவிட் டிருப்பவர்கள் கவலேக் கடலில் ஆழமாட்டார்கள். அப்படி இருப்பவர்கள் மிகச் சிலர். -

அத்தகையவர்கக நாடிச் சென்று அவர்களுக்குத் தொண்டு செய்து அவர்களோடு இணங்கி நிற்பவர் அபிராமி பட்டர். அவர்கள் திருவுள்ளக் குறிப்பீறிந்து ஒழுகுபவர்; இவர்களோடு சிறிதளவும் கருத்து மாறுபட்டுப் பினங்க மாட்டார். - -

எனது உனது என்று இருப்பார்

சிலர், யாவரொடும் பிணங்கேன். இறைவியின் பெருமையை அறிந்து, அவளே எல்லோ ருக்கும் தலைவி என்பதையும் உணர்ந்து, யாவரும் அவளு

தி-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/59&oldid=577998" இலிருந்து மீள்விக்கப்பட்டது