பக்கம்:திருக்கோலம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

អ៊០ திருக்கோலம்

டைய ஏவல்ாளர்கள் என்பதையும் தெளிந்து, அவளேயே வணங்கி வாழ்த்துவகை யன்றி வேறு யாரையும் வணங்கி வாழ்த்தாதவர் இவர்; வஞ்சகமுடையவரோடு இணங்காத வர்; இறைவியிடம் ஸ்ர்வ ஸ்மர்ப்பணம் செய்த பெரியவர் களோடு இணங்கி, அவரோடு சிறிதும் மாறுபடாமல், பிணங்காமல் இருப்பவர். -

இவ்வளவு உறுதிப்பாடு எப்படி வந்தது? இவர் கூறுவதைக் கேட்கலாம்.

என் அறிவின் திறத்தில்ை உன் பெருமையை அறிந்து 'உன் ஜனயன்றி வேருெருவரையும் வணங்காத உறுதியைப் பெறவில்லை, அப்படியே அறிவில்ை ஆராய்ந்து இன்னரோடு சேர்க்கூடாது, இன்னரிடமிருந்து பிரியக்கூடாது என்று எண்ணி அதற்கேற்ப ஒழுகவில்லை. நான் சிறிதும் அறிவு இல்லாதவன். அறிவுடையவர்களே தெளியமாட்டாத உன்னை அறிவு ஒன்றும் இல்லாத அடியேன் எப்படி அறிய முடியும்? தக்கது இன்னது, தகாதது இன்னது என்று பார்க் கும் அறிவுக்கும் எனக்கும் வெகுதூரம். வஞ்சகர் யார், அநுபூதிமான்கள் யார் என்று தேர்ந்து அறியும் அறிவு எனக்கு இல்லை என்கிருர், - -

அறிவு ஒன்று இலேன்.

பின் எப்படி இவ்வாறு செய்ய முடிந்தது? இவர் சொல் கிருர்; தாயே, எல்லாம் உன்னுடைய திருவருளால் விகாந்த அற்புதம். இந்த ஏழையிடம் நீ பெரிய கருணே வைத்தாய். சாமானியமான கருணை வைத்தால்கூட நான் உய்ந்திருக்க மாட்டேன். நான் மிகப் பாதாளத்தில் அழுந்தி இருப்பவன் என்பதை நீ உணர்ந்து, உன்னுடைய பெருங் கருணையை, என் தாபங்களெல்லாம் போக்கும் குளிர்ச்சியான தண்ண 'ளியை, என்னிடம் காட்டிய்ை. அதல்ை நான் உய்ந் தேன். உன்னையன்றிப் பிறரை வணங்காத உறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/60&oldid=577999" இலிருந்து மீள்விக்கப்பட்டது