பக்கம்:திருக்கோலம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

៩ឌ திருக்கோலம்

  • எனது உனது என்றிருப்பார்’ என்று அன்னையினிடம் பழுத்த அன்புடையவரை இந்தப் பாட்டில் சொன்ன ஆசிரியர், -

எனக்கு உள்ள எல்லாம் -

அன்றே உனது என்று அளித்துவிட்டேன்’ என்று தம் இயல்பைப் பின்பு ஒரிடத்தில் சொல்வார்.

அணங்கே, அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையில்ை

வணங்கேன் ஒருவரை; வாழ்த்துகி

லேன்; நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன்; எனதுஉனது என்றுஇருப்

பார்சிலர்; யாவரொடும்

பிணங்கேன்; அறிவுஒன்று இலேன்; என்கண்

நீவைத்த பேர்அளியே!

(தேவி, வெவ்வேறு சக்திகளாக உள்ள தெய்வப் பெண்கள் நின்னேச் சூழ்ந்து ஏவல் செய்யும் பரிவாரங்கள் ஆகையில்ை, உன்னேயன்றி. வேறு ஒருவரையும் அடியேன் வணங்கமாட்டேன்; வாழ்த்தவும் மாட்டேன்; உன் அன்பர் களாக இராமல் நெஞ்சில் வஞ்சகத்தை உடையவர்களோடு சேரமாட்டேன்; எனது எல்லாம் நின்னுடையதே. என்று எல்லாவற்றையும் நினக்கே அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப்பவர் சிலர்; அவர் எல்லாரோடும் மாறு படர்மல் உறவ் பூண்டிருப்பேன்; யான் அறிவு சிறிதும் இலேைைலும் அடியேனிடம் நீ வைத்த பெரிய குளிர்ந்த கருணை இருந்தவாறு என்னே! அதுவே இத்தனைக்கும் காரணம். - . . . .

ஒருவரையும் என்பதில் உம்மை தொக்கது, ஒருவரை யும் வணங்கேன், ஒருவரையும் வாழ்த்துகிலேன் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/62&oldid=578001" இலிருந்து மீள்விக்கப்பட்டது