பக்கம்:திருக்கோலம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+

V/

பட்ட ரின் தவச்சிறப்பை உணர முடிகிறது. அருளாளர்களின் திருவாக்கு ஊறுகாயைப் போல, பஞ்சாமிர்தத்தைப் போல, நாளாக ஆக் அதிகச் சுவையை ஊட்டிவரும்.

முருகப் பெருமான் திருவருளால் அன்னே அபிராமியின் துதிப் பாடல்களாகிய இந்த அந்தாதிக்கு உரை எழுதவும்: விளக்க்க் கட்டுரைகள் எழுதவும், 'விரிவுரை ஆற்றவும் முடிந்தது. என்னுடைய ஆசிரியப் பெருமானுடைய ஆசியே இந்த முயற்சியில் ஈடுபடுவதற்குரிய தைரியத்தை அளித்தது. பழைய பாடல்களேக் கட்டுரை வடிவில் விளக்கும் முறையைப் பல காலமாக ஆண்டு வருகிறேன். சங்கநூற். பாடல்கள் சிலவற்றை விளக்கிச் சங்க நூற் காட்சிகள் என்னும் வரிசையில் எட்டு நூல்களேயும், காவியமும் ஓவியமும் என்ற நூலேயும் எழுதினேன். பிறகு பன்னிரு. திருமுறைகளில் உள்ள பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்: தெடுத்து விளக்கித் திருமுறை மலர்கள் என்ற வரிசையின் :ன்னிரண்டு நூல்கன்எழுதினேன். கந்தர் அலங்காரம்,கந்தச் * அநுபூதிப்பாடல்களுக்கும் விளக்கம் எழுதினேன். அதே முறையில் அபிராமி அந்தாதிக்கும் விளக்கக் கட்டுரைகள் எழுதி நிறைவேற்றும்படி முருகன் திருவருள் பாலித்தான். இந்த நூலின் விளக்கத்தின்மாணிக்கவாசகர், அருணகிரி நாத் , தாயுமானுர் முதலிய அநுபூதிமான்களின் திரு வாக்குக்களே இடையிடையே மேற்கோளாகக் காட்டியிருக் கிறேன். அநுபூதிமான்கள் எந்தக் கடவுளே வழிபட்டாலும் அநுபவம் என்பது ஒன்ருகவே இருக்கும், இந்தத் திரு வாக்குக்களே ஒப்பு நோக்கும்போது அந்த உண்மை நன்ருகப் புலனுகும்.

அம்பிகையின் இயல்புகளே அபிராமியட்டர் எடுத்துச் சொல்லும் போது லலிதா சகசிர நாமத்திலுள்ள பல திரு. நாமங்கள் நினைவுக்கு வருகின்றன். அபிராமிபட்டர் பல காலும் அந்தச் கசிர நாமத்தைச் சொல்லி அன்னேயை அருச்சித்தவர். ஆதலின் அவருடைய உள்ளத்தில் அந்தத் தெய்விகத் திருநூல் நன்ருகப் பதிந்திருந்தது. அவர் பாடிய

... • *t . . .

. . .” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/7&oldid=577946" இலிருந்து மீள்விக்கப்பட்டது