பக்கம்:திருக்கோலம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருக்கோலம்

இன் பக்கனவு காணும்போது மனம் இருக்கிறது; அப் போது களிப்பு உண்டாகிறது. ஐந்து நிமிஷத்தில் பல நாள் அநுபவித்த சுகத்தைக் கனவாகக் காணுகிறது. காலமும் இடமும் மனத்துக்குள் விரிகின்றன. மனம் விரிந்து விம்பி அவற்றை ஏற்றுக் கொள்கிறது. இப்போது கனவு நிலை மாறி எல்லாம் மறந்த சுழுத்தி நிலே வந்து விடுகிறது. கனவிலே களிப்பு இருந்தது. சுழுத்தியில் எல்லாம் மறந்து மனமும் ஒய்ந்து இருக்கின்றது. அப்போது உண்டாகும் ஆனந்தத்தை இத்தகையதென்று சொல்கி முடியாது. எழுந்த பிறகு, நான் சுகமாகத் துரங்கினேன்’’ என்று சொல்லுகிருேம். கனவில் மனம் இருந்து இன்பத்தை அநுபவிக்கிறது. சுழுத்தியில் மனமும் அடங்கி ஆன்மா ஆனந்தாதுபவத்தைப் பெறுகிறது.

தியான யோகத்தில் ஜாக்கிற த்தில் சொப்பனம்போல அம்பிகையின் வடிவ தரிசனம் கிடைக்கிறது. அப்போது இன்பம் உண்டாகிறது. மனம் விரிந்து அம்பிகையின் அகண்ட வடிவத்தைக் காண்கிறது. இன்பம் மிகுதி யாகிறது. அந்த நிலே தீவிரமானுல் மனம் இல்லாமற் போகிறது. ஜாக்கிரத்தில் சுஷாப்தி நிலை வருகிறது. அப் போது உண்டாகும் ஆனந்தம் அளவற்றது. கருவி கர ணங்கள் கழன்ற நிலை அது, ஒரே பரவெளியில் ஒளியே ஆனந்தமாய் எல்லாவற்றையும் தனக்குள் கரைத்துக் கொள்ளும் நிக் அது. அங்கே ஆத்மானந்தம், பராம்பிகை யோடு அத்விதியமாக ஒன்றும் அநுபவம், பிரம்மானந்த

அநுபவம் ஏற்படுகிறது.

அந்தக் கரணங்கள் விம்மிக் கரை புரண்டு வெளியாய்விடின். - - -

இத்தகைய நிலையே நிர்விகல்ப சமாதி. முதலில் அம்பி கையின் திருவுருவத்தைத் தியானிக்கப் புகுந்து, பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/70&oldid=578009" இலிருந்து மீள்விக்கப்பட்டது