பக்கம்:திருக்கோலம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணம் கழன்ற இன்பம் . 61

அவளுடைய தேஜோமய வடிவம் உள்ளமெல்லாம் நிரம்பி நிற்கக் கண்டு, அப்பால் அந்த ஒளி வடிவிலே கலந்து எல்லாம் மறந்த ஆனந்த் அநுபவம் உண்டாகிறது. நிர்விகல்ப சமர்தி என்பது இதுதான். х

இத்தகைய இன்பம், மூச்சையடக்கி யோகம் செய் யாமல், இந்திரிய நிக்கிரகம் செய்து வருந்தாமல், தியானத் தின் மூலமாகக் கிடைக்கிறது. அம்பிகை இந்த வழியைக் காட்டி அநுக்கிரகம் புரிகிருள். இத்தகைய பேரானந்தப் பிராப்திக்கு உபாயம் அவள் திருவுருவத் தியானம் என்பதை. அவளே காட்டிக் கொடுக்கிருள். -

மிகவும் அல்லற்பட்டுப் பல காலம் பயின்று பெற வேண்டிய இன்பத்தை, எளிய முறையில் அடைய அம்பிகை வழி காட்டிேைள என்பதை நினேத்து அபிராமிபட்டர் வியக்கிருள். அம்பிகையின் கருணயை நினைந்து உருகுகிருர். தோயே, நீ எனக்குக் காட்டிக்கொடுத்த இந்த உபாயத்தை நான் எவ்வாறு மறக்க முடியும்? என்கிறர். -

எங்ங்னே மறப்பேன் நின் விரகினேயே!

தியானத்தின் மூன்று வேறு நிலைகளை இந்தப் பாட்டில் அபிராமிபட்டர் சொல்கிருர், முதலில் சொரூபத் தியான மும், பிறகு அகண்டாகார விருத்தியும், அப்பால் நிர்விகல்ப சமாதியும் ஆகிய மூன்றையும் அம்பிகையின் திருவருளால் பெற்றவர், அந்த மூன்று நிலையையும் இப்போது நினைந்து நினைந்து உருகுகிருர், அம்பிகையைத் தாமரையில் வீற். றிருக்கும் தேவியாகத் தியானிக்கப் புகுந்து, உள்ளம் முழு வதும் நிரம்பிய தேஜோமய விக்கிரகமாகக் கண்டு, கருவி கரணங்கள் சுழன்ற அநுபவத்திலே கரைந்து ஒன்றும் இன்பத்தை அடைந்தார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/71&oldid=578010" இலிருந்து மீள்விக்கப்பட்டது