பக்கம்:திருக்கோலம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66, திருக்கோலம்

தும் வழிபடுவது அன்பர்களின் இயல்பு. மலரை இடும் போது மனம் என்னும் மலரையும் திருவடியில் இட வேண்டும். . * x

தகட்டிற் சிறந்த கடம்பையும் நெஞ்சையும்

தாளிணைக்கே புகட்டி?? என்று கந்தர் அலங்காரம் சொல்கிறது.

மனம் எளிதில் ஒன்றில் ஈடுபடாது. அதல்ை, நெடு நேரம் விடாப்பிடியாக அவள் திருநாமத்தைப் பலகாலும் சொல்லி அவள் மலரடியில் மலரை இட்டால், மெல்ல மெல்ல மனமும் அதில் படியும். புறத்தில் செய்யும் எல்லா வழிபாடுகளும் அகத்தே செய்வதற்கும் மனத்தை நிறுத்து வதற்கும் உரிய வழிகள். பிறர் பூஜை செய்வதைத் தரிசிக்கும் சரியா மார்க்கமும், நாமே பூஜை செய்யும் கிரியா மார்க்கமும், உள்ளத்திலே தியானம் செய்து ஒன்றுவதாகிய யோகத்திற்குச் செல்ல மேற்கொள்ளும் படிகள். நாமே பூஜை செய்வது என்பது கிரியை என்னும் படி, அதற்கு மேற்படிக்குப் போக வேண்டுமானல் பூஜை செய்யும் போதே மனத்தை ஒருமுகப்படுத்திப் பழக வேண்டும்; மலரோடு மனத்தையும் வைத்துப் பழக வேண்டும்.

ஒருமுறை மனத்தை வைத்தால் அது அங்கே நில்லாது; திரும்பவும் எங்கோ ஒடும். மீண்டும் மீண்டும் நாமத்தைச் சொல்லி மலரை இட்டு மனத்தை அங்கே வைக்க வேண்டும். ஆயிரம் என்பது வெறும் எண்ணிக்கைக்கு மாத்திரம் அமைந்ததன்று; பல காலும் இந்த மனத்தைப் பழக்குவதற் காக வைத்த தந்திரம். . . х

மணமுள்ள மலர்களை அம்பிகையின் திருவடிக்கு அழகும் மணமும் உண்டாகும்படி இடுகிருேம் என்று எண்ணக்கூடாது. அன்னையின் திருவடியே கமலமலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/76&oldid=578015" இலிருந்து மீள்விக்கப்பட்டது