பக்கம்:திருக்கோலம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெறும் பதவி ፀ? .

போன்றதுதானே? அதன் அழகும் மணமும் வேறு எந்த மலருக்கும் இருப்பதில்லையே! அது பாத விரைக்கமலம் திருவடியாகிய மணம் பொருந்திய தாமரை. அந்த மலரில் நாம் மலரை இடுவது அதனே அழகு செய்வதற்கு அன்று; நம் மனம் அழகும் நல்ல மணமும் பெறுவதற்காகவே அருச்சனே செய்ய வேண்டும். குருடனுக்குத் தடியைக் கொடுத்து நடக்கச் செய்வதுபோல் நம் முடைய கண்ணையும் கருத்தையும் திருவடியிலே ஈடுபடுத்துவதற்கு மலரை இட்டு அருச்சனை செய்யவேண்டும்.

அன்பர்கள் மிக்க அன்போடு அன்னைக்கு அருச்சனை செய்வார்கள். பல வகையான மணமும் நிறமும் உள்ள புதிய மலர்களைக் கொய்துவந்து பூஜை செய்வார்கள். நகமெலாக் நேயக் கையால் நாண்மலர் கொய்து’ என்று - அப்பர் சொல்வார். பூதாளும் தலேசுமப்ப’ என்று ஞான சம்பந்தர் பாடுவார். அன்பர்களுக்கு இறைவனேக் கூடை கூடையாக மலரிட்டுப் பூஜிப்பதில் அவ்வளவு ஆசை.

கோவிலில் ஆறு கால்ம் பூஜை செய்கிருர்கள். பகலும் இரவும் பூஜை நடைபெறுகிறது. அன்பர்களும் இரவும். பகலும் அன்னேயை ஆர்வத்துடன் பூஜித்து வழிபடு கிருர்கள்.

'எழுதரு மறைகள் தேரா

இறைவனே எல்லிற் கங்குற் பொழுதறு காலத்து என்றும்

பூசனே விடாது செய்து ?

என்று இரவும் பகலும் பூஜை செய்வதைத் திருவிளேடாடற். புராணத்தில் பரஞ்சோதி முனிவர் சொல்கிருர், -

அபிராமிபட்டர் அத்தகைய பக்தர்கண் நினைக்கிருர்;

தோயே, உன்னுடைய திருவடியாகிய மணம் பொருந்திய தாமரை மலரில் பலவகை மணமும் வண்ணமும் விரவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/77&oldid=578016" இலிருந்து மீள்விக்கப்பட்டது