பக்கம்:திருக்கோலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருக்கோலம்

புதிய மலர்களை அருச்சித்து இரவிலும் பகலிலும் வழிபடும் வன்மையுடைய பக்தர்கள்’ என்று அவர் ககனச் சொல்கிருர், இப்படி இரவும் பகலும் செய்வதில் சலிப்பில்லாமல் இருக்க வேண்டுமானல் மன வலிமை இருக்கவேண்டும் அல்லவா?

விரவும் புதுமலர் இட்டு நின்

பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்ச வல்லார். அவர்கள் என்ன பேறு பெறுவார்கள்? இந்த உலகத்தில் எத்தகைய நிலையில் அவர்கள் இருந்தாலும் இந்த வாழ்வை. நீத்தபிறகு அவர்கள் மிகச் சிறந்த பதவியையே அடைந்து, இன்புறுவார்கள்; இந்திர பதவியையே அடைவார்கள்.

- தேவராசனகிய இந்திரன் தன் சிங்காதனத்தில் வீற்றிருக்கிருன், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அரசன் அவன். தேவர்கள் எல்லாம் வந்து அவனேப் புகழ் கிருர்கள். வருணன், வாயு, அக்கினி முதலிய தேவர்களே நாம் புகழ்ந்து பிரார்த்திக்கிருேம். அத்தகைய பெரிய தேவர்கள் யாவரும் இந்திரனைப் புகழ்கிறர்கள்; அவன் ஏவலின் படி நடக்கிருர் கள்; என்ருல், அவன் பதவி. எவ்வளவு உயர்ந்தது! .

இமையோர் எவரும் பரவும் பதமும்.

அவனுடைய பதவிக்கு எத்தனை விதமான அடை யாளங்கள்! குதிரையின் மேலும் வேறு வாகனங்களின் மேலும் தேவர்கள் வருகிருச்கள். எல்லா வாகனங்களிலும் பெரிது யானே. அது உயர்ந்தது; சிறப்புடையது. உலகி லுள்ள யானைக்கே பெருமை உண்டு. யானையை வைத் திருப்பவனைப் பெரிய செல்வன் என்பார்கள்; கஜாந்த ஐச்வர்யம்’ என்பார்கள். உடம்பு முழுவதும் பளபள வென்று வெண்ணிறம் வாய்ந்த யாண் மிக அருமையானது. அயிராவதம் என்பது அதன் பெயர். அதற்கு நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/78&oldid=578017" இலிருந்து மீள்விக்கப்பட்டது