பக்கம்:திருக்கோலம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெறும் பதவி 69

தந்தங்கள் இருக்கும். அது நடந்து வந்தால் கைலாச

பர்வதமே கால் பெற்று நடப்பதுபோல இருக்கும்.

வெள்ளிமலை எனவே, கால்வாங்கி நிற்கும் களிற்றன்” என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடுவார். அந்த அயிராவதம் இந்திரனுக்கு வாகனம்,

ஆறுகளில் சிறந்தது கங்கை, ஆற்றின் பெருமை அதன் அகல நீளத்தால் உண்டாவதில்லை; அதனுடைய நீரின் சிறப்பால் உண்டாகும். உலகிலுள்ள எந்த நீரும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால் சில நாட்களில் நாற்ற மெடுத்துவிடும். புழுத்துவிடும், ஆல்ை கங்கை நீர் அப்படி ஆவதில்லே. அது புனிதமுடையது. அதனுல்தான் பாரதியார் அதை, 'இன்னறு நீர்க்கங்கை யாறு’ என்ருர், .

வானுலகத்தில் ஒரு கங்கை இருக்கிறது. அதிலிருந்து வந்ததுதான் இந்தக் கங்கை, பூவுலகக் கங்கைக்கே இத்தனை சிறப்பால்ை வானுலகக் கங்கைக்கு எவ்வளவு மதிப்பு இருக்க வேண்டும்! தேவமகளிர் நீராடும் புனிதம் உடையது அது. அந்த ஆறு இந்திரனுக்குச் சொந்த மானது.

இந்திரனுடைய வலிமை மிகப் பெரிது. எல்லோரையும் விடத் தேவர்கள் வலிமை உடையவர்கள், உலகிலுள்ள மக்களுக்கு உடல் வலிமையையும், உள்ள வலிமையையும் தருகிறவர்கள் தேவர்கள். அவர்களுடைய தலைவனுகிய இந்திரனுக்கு அவர்கள் எல்லோரையும்விட மிகுதியான வலிமை உண்டு என்று சொல்ல வேண்டியதில்லை. r

தேவர்களில் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆயுதம் உண்டு, இந்திரனுடைய ஆயுதம் வஜ்ரம். வஜ்ரத்தில்ை எல்லா வகையான உலோகங்களையும் அறுத்துவிடலாம். இரும்பை யும் அறுக்கும் ஆற்றலுடையது அது. வஜ்ரத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/79&oldid=578018" இலிருந்து மீள்விக்கப்பட்டது