பக்கம்:திருக்கோலம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vị

பாடல்களிளெல்லாம் அந்த நூலில் வரும் அம்பிகையின் திருநாமங்களும், அவற்ருல் தெளிவாகும் பண்புகளும் அமைந்திருத்தல் இயல்பே. எனவே, இந்த விளக்கக் கட்டுரைகளில் பல இடங்களில் லலிதா சகதிரநாமத்தை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

பூநீவித்யையில் துறைபோனவர்கள் இந்த நூலுக்கு விரிவுரை எழுதில்ை, அது யந்திர மந்திர தந்திர நுட்பங் களுடனும் அம்பிகையின் வரலாற்றைக் கூறும் தேவி பாகவதம் முதலிய நூல்களின் மேற்கோள்களுடனும் விளங்கிப் பெரும் பயனேத் தரும். எளியேனுக்கு அத்தகைய ஆற்றல் இல்லாவிடினும்: ஒரளவு பக்தியுணர்ச்சியை உணர்ந்து கொள்ளும் உள்ளத்துடன் இப்பாடல்களேப் படித்தேன்; சுவைத்தேன்; ஆழ்ந்தேன். முருகன் திருவருள் கூட்டுவித்தமையால் உரையும் விளக்கமும் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அம்பிகையை உபாசிக்கும் பெரிய வர்கள் :லர் இந்தக் கட்டுரைகளைப் படித்து வாழ்த்தி ஞர்கள். அந்த வாழ்த்தின் பயகுவே இவற்றைப் புத்தக வடிவில் வெளியிடும் துணிவு உண்டாயிற்று.

அபிராமி அந்தாதி விளக்கர் இந்தப் பகுதியோ டு நிறை வடைகிறது. இவற்றை வெளியிடத் தூண்டிய பூரீசங்கர கிருபா முன்னுள் ஆசிரியர் அமரர் கே.ஆர். வேங்கடரா மையர் அவர்களே நன்றியறிவுடன் நினைவு கூர்கிறேன், இப்போது அதன் ஆசிரியராக இருக்கும் ரீ கே. வி. சுப்ப ரத்தினம் ஐயரவர்களுக்கும், அந்தப் பத்திரிகையின் துணே யாசிரியர் நீ கே. எஸ். வேங்கடராம சாஸ்திரிகள் அவர் களுக்கும் என்னுடைய நன்றியறிவைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

இந்தக் கட்டுரைகள் பத்திரிகையில் வெளிவரும் போதும், புத்தக உருவில் வெளிவந்த பின்பும் படித்துப் பாராட்டி ஊக்கம் அளித்த அன்பர்கள் யாவருக்கும் என் நன்றியறிவு உரியது.

காந்தமலே22 கி. வா. ஜகந்நாதன்

சென்னே :23, 1 - 1 1--77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/8&oldid=577947" இலிருந்து மீள்விக்கப்பட்டது