பக்கம்:திருக்கோலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - திருக்கோலம்.

ஆயுதம் என்றல் அது வேறு ஆயுதங்களையெல்லாம் அறுத்து அழிக்கும் ஆற்றலுடையதாக இருக்குமல்லவா? அந்த வஜ்ராயுதத்தை உடையவன் இந்திரன்.

அவன் கற்பக விருட்சத்தை உடையவன். கற்பக. மரங்கள் ஐந்து என்று சொல்வார்கள். எது வேண்டு. மாலுைம் தருவது கற்பகம். அப்படி ஒன்று கிடைத்தால் அதைப் பெற்றவர்களுக்கு எந்தக் குறையும் இருக்க நியாயமில்லையே! எல்லாப் பண்டங்களையும் சிரமப்பட்டு ஈட்டிப் பாதுகாத்து வைப்பது எளிதன்று. இந்திரனுக்கு அந்தத் தொல்லே வேண்டாம். எந்த விதமான பொருளையும் எந்தச் சமயத்தில் கேட்டாலும் உதவும் கற்பகம் இருக்கும் போது, பண்டங்களேச் சேமிக்கும் கவலே அவனுக்கு ஏது? இதைவிடப் பெரிய செல்வ நிலை வேறு உண்டா?

அயிராவதமாகிய வாகனமும், ஆகாய கங்கையும், வலிமையும், வஜ்ராயுதமும், கற்பக மரங்கள் அடர்ந்த சோலேயும் உடையது இந்திர பதவி. அம்பிகையை மலரிட்டு வழிபடுகிறவர்கள் அந்தப் பதவியைப் பெறுவார்கள்.

அயிராவ்தமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக் காடும் உடையவரே.

- "இந்திரராக வாழ்வார்’ என்று சொன்னல் இந்திரனைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அந்தப் பதவியின் பெருமை தெரியாது. அதனல் அதன் சிறப்பைச் சொல்கிரு.ர். முப்பத்து முக்கோடி தேவர்களும் அவனிடம் வந்து புகழ்ந்து வழிபடுகிறர்கள். எங்கேனும் புறப்பட வேண்டு. மால்ை நான்கு கொம்புகளையுடைய வெள்ளை யானே வந்து நிற்கிறது. அவன் நீராட வேண்டுமானல் வானுலகக் கங்கை யின் நீர் இருக்கிறது. அவன் எவ்வளவு போர்களில், பெரிய பகைவர்களே வென்றிருக்கிருன்! வஜ்ராயுதத்தை அவன் ஏந்தியிருக்கிருன். எந்தச் சமயத்தில் எதைக் கேட்டாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/80&oldid=578019" இலிருந்து மீள்விக்கப்பட்டது