பக்கம்:திருக்கோலம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெறும் பதவி 71

உடனே கற்பகம் தருகிறது. ஒரு கற்பகமா? ஐந்து மரங்கள் சோலேயாக அடர்ந்து வளர்ந்து நிற்கின்றன. ஒரே சமயத் தில் பல பொருள்களை அவன் பெறுகிருன்’ என்று விரித்துக் கற்பனை செய்யும்படி பாடுகிருர் அபிராமி பட்டர்.

விரவும் புதுமலர் இட்டுநின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல் லார்இமை யோர்எவரும் பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும், உரவும், குலிசமும், கற்பகக் காவும் உடையவரே,

(தாயே, பலவகை வண்ணமும் வடிவும் மணமுமுடைய புதிய மலர்களே அருச்சனை செய்து நின்னுடைய திருவடி யாகிய மணத்தையுடைய தாமரைகளே இரவும் பகலும் வணங்கும் வன்மையையுடைய அன்பர்கள், இப்பிறவிக்குப் பின், தேவர்கள் யாவரும் புகழும் பதவியையும், அயிராவத. மான வாகனத்தையும், ஆகாய கங்கையையும், வலிண்ம யையும், வஜ்ராயுதத்தையும், கற்பகச் சோலேயையும். உடை ய இந்திரராக ஆவார்கள். -

விரவும்-பல வகையாக உள்ள. விரை-நறுமணம். இறைஞ்ச-வணங்க, பதம்-பதவி. பகீரதி-கங்கை, உரவு-வலிமை. குலிசம்-வஜ்ராயுதம். கா-சோலே.)

அன்னேயின் அன்பர்கள் இந்திர பதவி பெறுவார்கள் என்று முன்னும் 74, 15-ஆம் பாடல்களில் சொல்லி யிருக்கிருர். -

இது அபிராமி அந்தாதியில் 38-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/81&oldid=578020" இலிருந்து மீள்விக்கப்பட்டது