பக்கம்:திருக்கோலம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு அறுப்பவள்

பக்தர்களுக்குத் தம்முடைய உபாசன மூர்த்தி களிடம் உள்ள உறுதியான நம்பிக்கைக்கு ஈடும் இல்லை; எடுப்பும் இல்லை. வானம் இடிந்து விழுந்தாலும் அசையாத உறுதி உடையவர்கள் அவர்கள். அப்பர் சுவாமிகளும் பிரக லாதனும் இந்த உறுதியை உடையவர்களுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளவர்கள்.

உண்மையான அன்பர்கள் எதற்கும் அஞ்சமாட் டார்கள். இந்த உலகில் வாழும்போது உண்டாகும் துன்பங்களுக்கும். மறுமை வாழ்வில் வரும் என்று கூறும் இன்னல்களுக்கும் அவர்கள் அஞ்சாதவர்கள். அஞ்சுவது யாதொன்றும் இல்லே, அஞ்ச வருவதும் இல்ல’’ என்று

அப்பர் சுவாமிகள் முழங்கினர்.

பிறப்பு, இறப்பு என்னும் இரண்டுமே எல்லாவற் றுக்கும் மேலான துன்பங்கள், இந்த இரண்டையும் ஒன்ருகவே சொல்லிவிடலாம். இந்த இரண்டும் ஒன் ருேடு ஒன்று தொடர்புடையவை. ஒன்று இல்லாவிட்டால் மற்றென்று இல்லே. பிறப்பு இருந்தால் நிச்சயமாக இறப்பு உண்டு. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு’ என்பது சுந்தரர் திருவாக்கு. உடம்பிலுைம் உள்ளத்தாலும் படு கின்ற துன்பங்கள் அத்தனையும் பிறவி எடுத்ததனல் உண்டானவை. பிறவி இல்லாமல் இருந்தால் எந்தத் துன்பமும் இல்லை. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/82&oldid=578021" இலிருந்து மீள்விக்கப்பட்டது