பக்கம்:திருக்கோலம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு அறுப்பவள் 73

'பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம் - பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்’ என்று மணிமேகலை கூறுகிறது. அதனுல்தான்திருவள்ளுவர், ‘'வேண்டுங்கால் வே ண் டு ம் பிறவாமை என்றர். இறைவனை வழிபட்டு அன்பு செய்து நிற்பதன் முடிந்த பயனே பிறவியை ஒழிப்பதுதான்.

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார்

இறைவன் அடிசேரா தார்?? என்று திருக்குறள் கூறுகிறது.

அம்பிகையைச் சரணம் என்று புகுந்தவர்கள் இந்திர பதவியைப் பெறுவார்கள் என்று முன்பு சொன்னர். அந்தப் பதவியும் ஒரு காலத்தில் அழிந்துவிடும். ஆகையால் மேற் கொண்டு பிறவாத நிலையையும் அடைவார்கள். அந்த நிலேதான் முத்தி. -

இந்த உலகில் வாழும்பொழுதே இறைவியின் திரு வருளுக்குப் பாத்திரமானவர்கள் இனிப் பிறவியை அடைய மாட்டார்கள். நமக்கு இனிப் பிறவி இல்லை என்ற உறுதி யான உணர்வு அவர்களுக்கு உண்டாகும்.

'இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்? என்று சுந்தரரும்,

யோனேதும் பிறப்பஞ்சேன்?? என்று மணிவாசகரும் கூறுவதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும். முன்கூட்டியே ஆயுட் பாதுகாப்புக்குரிய பணத்தைச் செலுத்தியவர்கள் உரிய காலத்தில் தமக்குப் பெருந்தொகை கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டோடு இருப்பதைப் போலப் பக்தர்கள் இருப்பார்கள்.

அபிராமிபட்டர் அம்பிகையின் அருளை முற்றப் பெற் நவர்; இனி நமக்குப் பிறவி இல்லை’ என்ற உறுதி படைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/83&oldid=578022" இலிருந்து மீள்விக்கப்பட்டது