பக்கம்:திருக்கோலம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அவள் காட்சி

இறைவனிடம் பக்தி செய்து அவனுடைய வடிவத்தை உள்ளத்தே வைத்துத் தியானித்து ஈடுபட்டால் உள்ளம் எப்போதும் அவனேயே நினைக்கும். இந்த அன்பு முறுகில்ை எந்த ஒலி கேட்டாலும் அவைேடு சம்பந்தமான ஒலி யாகவே தோன்றும். எங்கே பார்த்தாலும் அவனுடைய வடிவம் தோன்றும். உண்முகத்திலே செய்த தியானத்தின் உறைப்பினலே அமைகின்ற அநுபவம் இது. -

காதல் உலகத்திலும் இப்படி ஒர் அநுபவம் உண்டு. இரு பெண்ணிடத்தில் முறுகிய காதல் கொண்டவன் அவளைப் பிரிந்திருக்கும் சமயத்தில், அவன் உள்ள ம் அவள் டிெவழகிலே ஈடுபட்டு இருத்தலால், புறத்தே வெளியில் H.‘ வடிவம் தோன்றுமாம். இதை உருவெளித் سEj603 L) لa ہوتی தோற்றம் என்று சொல்வார்கள். கோவையில் வரும் துறை களில் ஒன்று அது. கம்பசாமாயணத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது. சீதா பிராட்டியைப்பற்றிச் சூர்ப்பனகை சொல்லக் கேட்ட இராவணன் அவளைப்பற்றியே சிந்தனை செய்து கொண்டிருந்தான். அப்போது ஓர் அழகிய மங்கை உருவெளித் தோற்றமாக அவன் கண்முன் தோன்றிள்ை. அவன் சீதையைக் கண்டதில்லை. ஆகையால் தன் கண்முன் தோன்றும் வடிவு அவள் வடிவுதான என்று தெரிந்து கொள்ள எண்ணிச் சூர்ப்பனகையை அழைத்து வரச் செய்து, இதோ தெரிகிருளே; இவளா சிதை??’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/90&oldid=578029" இலிருந்து மீள்விக்கப்பட்டது