பக்கம்:திருக்கோலம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அவள் காட்சி 81

கேட்டர்ன். அவளோ எப்போதும் இராமனேயே எண்ணிக் கொண்டு அவன் வடிவழகிலே தன் உள்ளத்தைப் பதித்தவள். அவள் வெட்டவெளியைப் பார்த்தபோது அவளுக்கு இராமனுடைய வடிவமே தோன்றியதாம். அதல்ை, இவன்தான் அந்த வல்வில் இராமன்’ என்ருளாம்.

சிற்றின்ப நோக் கால்காதல் முறுகியவர்களுக்கே இப்படி உருவெளித்தோற்றம் உண்டாகுமானல், உண்மையான பக்தர்களுக்குப் பார்க்கும் இடங்களில் இறைவனுடைய வடிவம் தோன்றுவது ஆச்சரியம் அன்று.

அருணகிரிநாதப் பெருமான் முருகனிடம் அளவற்ற பக்தியை உடையவர். அவனே உள்முகத்தே நன்ருகத் தரிசித்தவர். அந்த அநுபவம் முதிர்ந்து வெளியிலும் அந்தக் காட்சியைக் காணும் சிறந்த நிலே அவருக்கு உண்டாயிற்று. அந்த அநுபவத்தைச் சொல்கிரு.ர். :

செங்கேழ் அடுத்த சினவடி வேலும்

திருமுகமும் பங்கே நிறைந்தநற் பன்னிரு தோளும்

பதுமமலர்க் . கொங்கே தரளம் சொரியும்செங்கோடைக்

குமரன் என எங்கே நினைக்கினும் அங்கேவந் தென்முன்

எதிர்நிற்பனே22 X

என்ற கந்தர் அலங்காரப் பாட்டில் அந்த அநுபவத்தை வெளியிடுகிறர், х -

உண்முகத் தியானத்தில் ஈடுபட்டவர்கள், தியானத்தி விருந்து விழித்தால் சிறிது நேரம் தியானத்தில் இருந்த நிலேயின் அநுபவம் இருக்கும். சினிமாவைப் பார்த்துவிட்டு வந்தால் எங்கோ கனவில் நடப்பதுபோன்ற பிரமை தட்டும்.

தி-ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/91&oldid=578030" இலிருந்து மீள்விக்கப்பட்டது