பக்கம்:திருக்கோலம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

கால ஜயம் 37

பிறவியையே கடைசிப் பிறவியாகச் செய்துவிடுவார்கள். இந்த உடம்பை விட்டால் பந்தபாசத்தினின்றும் விடுபட்டு இறைவைேடு ஒன்றிவிடுவார்கள். அவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். இறைவன் திருவருள் நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதி இருப்பதனால் அவர்கள் மரணத்தை வரவேற்பார்கள். -

'சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது தான்வந்து முற்றும் எனலால் - சகமீது இருந்தாலும் மரணம்.உண்டு என்பதைச்

சதாநிஷ்டர் நினைவ தில்லே??

என்ற தாயுமானவர் பாடல் இந்த உண்மையைப் புலப்படுத் தும். அவர்கள் மற்றவர்கள் செல்லும் வழியில் போகாமல், இறைவனே அ.ை யும் நேர்வழியில் செல்வார்கள்.

புராணங்களில், நல்லவர்கள் மரணம் அடையும்போது சிவகணங்கள் வந்து அழைத்துச் செல்வார்கள் என்றும், அல்லாதவர்களே யமதூதர்கள் அழைத்துச் செல்வார்கள் என்றும் கூறி இருப்பதைக் காணலாம். தேச சுதந்தரப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளிவந்தால் தேசத்தொண்டர்கள் அவர் களுக்கு மாலை சூட்டி அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வார்கள், சிறை மாறும் குற்றவாளிகளைக் கையில் விலங்கிட்டுக் காவலாளர்கள் அழைத்துக்கொண்டு சென்று வேறு சிறையில் அடைப்பார்கள். ஞானிகளும் அஞ்ஞானி களும் மரணம் அடையும்போது நிகழ்வதாகப் புராணங்கள் சொல்லும் செய்திகள் இவற்றைப் போன்றனவே.

பற்றுள்ளவர்கள் இறந்தால் மறுபடியும் பிறவியை அடை வார்கள். பற்றற்றவர்களோ பிறவாத இன்ப நிலையை அடைவார்கள். இந்தக் கருத்தையே புராணங்கள் அவ்வாறு காட்டுகின்றன. - : . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/97&oldid=578036" இலிருந்து மீள்விக்கப்பட்டது