பக்கம்:திருக்கோலம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஜயம் - 83

அருளாளர்கள் தம்முடைய உபாசன மூர்த்தியிடம், 'கடைசிக்காலத்தில் யமதூதர்களிடம் என்னேக் காட்டிக் கொடுக்காமல் நீ வந்து என்ன ஆட்கொண்ட ருள வேண்டும்’ என்று பாடியிருக்கிறர்கள். அருணகிரிநாதர், மோகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன் வந்தால் என் முன்னே, தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்’ என்று கந்தர் அலங்காரத்திலும், கார்மரமிசை காலன் வரிற் கலபத்து, ஏர்மாமிசை வந்து எதிரப்படுவாய்’ என்று கந்தர் அநுபூதியிலும் பாடுகிறர். -

அன்னையிடம் முறுகிய பக்தி பூண்ட அபிராமிபட்டரும் அப்படிச் சொல்கிறர். அதை இப்போது பார்க்கலாம்.

அபிராமி அம்ம்ை காலனத் தன் காலால் உதைத்தவள். திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசுவரரே காலசங்காரம் செய்தார் என்று புராணம் சொன்னலும், அப்பெருமான் தம் இடக்காலால்தான் காலனே உதைத்து வீழச் செய்தார். அந்த இடக்கால் அம்பிகைக்குரியது. ஆகவே அம்பிகைதான் காலன உதைத்து வீழ்த்தினுள் என்பதில் தவறு ஒன்றும் இல்லே. -

'இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளுங்குயில் என்று திருவகுப்பில்அருணகிரிநாதர் பாடு கிருர். அம்பிகை யமபயம் போக்குபவள் என்பதை அந்த அடிகளில் காண்கிருேம். அம்பிகை மரணபயத்தைப் போக்குபவள் என்பதை லலிதா சகசிரநாமத்திலுள்ள பல திருநாமங்கள் விளக்குகின்றன. மரணத்தை ஒழிப்பவள் என்ற பொருளில் சிம்ருத்யு மதனி என்ற திருநாமம் (181) இருக்கிறது. மரணம் என்னும் மரத்தைத் தறிக்கும் கோடரி போன்றவள் அவள் என்பதை, ம்ருத்யு தாரு குடாரிகா (749) என்ற திருநாமம் சுட்டுகிறது. பிறப்பு, இறப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/99&oldid=578038" இலிருந்து மீள்விக்கப்பட்டது