பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௳

திருச்சிற்றம்பலம்

திருக்கோவையார் உரைநடை


க. இயற்கைப் புணர்ச்சி

இது ‘தெய்வப் புணர்ச்சி’ , ‘முன்னுறு புணர்ச்சி’, ‘காமப் புணர்ச்சி’ எனவும் படும்.

தலைமகனும் தலைமகளும் பொழிலிடத்து எதிர்ப்பட்டுத் தெய்வம் இடை நிற்பத் தம்முள் ஒத்த அன்பினராகக் கூடுவது.

1. காட்சி [1. திருவளர்]

தலைவன் தலைவியைக் கண்ணுற்று இவள் காமன் தன் வென்றிக் கொடிபோல் விளங்குகின்றாள் என வியக்கின்றான்.

2. ஐயம் [2. போதோ]

வியந்து, இம் மாது திருமகள் முதலாகிய தெய்வமோ அல்லது மக்களுள் ஒருத்தியோ என ஐயுறுகின்றான்.

3. தெளிதல் [3. பாயும்]

தலைவியின் கண் இமைத்தலாலும், அடி நிலத்தில் தோய்தலாலும், சூடிய மலர் வாடுதாலாலும் இவள் தெய்வம் அல்லள் எனத் தெளிவுறுகின்றான்.