பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. இயற்கைப் புணர்ச்சி

9. இருவயின் ஒத்தல். [9. உணர்ந்தார்க்கு]
கலவிமீது அன்பு மீதுார இவளைப் புனருந்தோறும் இன்பம் பெருகுகின்றது எனத் தலைவன் மகிழ்கின்றான்.

10. கிளவி வேட்டல் [10. அளவியை]
அங்ஙனம் மகிழ்ந்த தலைவன் தலைவியின் பேச்சின்பம் எத்தகைய சுவையுடைத்தோ என அவள் பேச்சைக் கேட்க விரும்புகின்றான்.

11. நலம் புனைந்துரைத்தல் [11. கூம்பலங்கை]
அங்ஙனம் விரும்பிய தலைவன் தலைவியின் புன்முறுவலைக் கண்டு வருத்தம் சிறிது நீங்கிப் பொழிலில் இருந்த வண்டுகளைப் பார்த்து, 'வண்டுகளே இவளது வாய் போல நறுமணம் வீசுகின்ற ஆம்பற் பூக்களை உங்கள் மருத நிலத்தில் நீங்கள் கண்டதுண்டோ' என அவள் நலத்தைப் பாராட்டி வினவுகின்றான்.

12 பிரிவு உணர்த்தல் [12. சிந்தாமணி]
தனது நலத்தைத் தலைவன் பாராட்டக் கேட்ட தலைவி நாணி வருந்த, அதைக் கண்ட தலைவன் 'நான் இவனை விட்டுப் பிரிவேன் என நினைக்கின் றாள் போலும்’ என நினைத்து நான் உன்னைப் பிரிந்து ஆற்றுவேனோ' என வருந்தி, அவளுக்குத் தனது பிரிவின்மையைப் பற்றிக் கூறுகின்றான்.

13. பருவரல் அறிதல் [13. கோங்கின்]
அதனை உணர்ந்த தலைவி பிரிவு என்பது ஒன்று உண்டு என நினைத்துப் பெரிதும் வருத்தம் அடையத், "தான் பிரிந்தால் பின்பு கூடுதல் அரிது என்று நினைத்தோ, அல்லது நெடும் பொழுது இவ்வாறு வருத்தத்துடன் இருந்தால் அது குடிப் பழியாகும் என நினைத்தோ இவள் வருத்தம் அடைந்துள்ளாள், உண்மை யாதோ அறிகிலேன்" எனக் கருதுகின்றான்.