பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் உரைநடை

14. அருட்குணம் உரைத்தல் [14. தேவரில்]
அங்ஙனம் கருதித் தலைவியை நோக்கி, 'திருவே ! யார் நம்மைக் கூட்டி வைத்தார்; யார் நம்மைப் பிரிக்க வல்லார்; தெய்வத்தின் அருள்தானே நம்மைக் கூட்டி வைத்தது, நீ ஏன் வாடிப் புலம்புகின்றாய்' என்று தெய்வத்தின் அருட்குணத்தைத் தலைவிக்குத் தலைவன் எடுத்துரைத்தான்.

15. இடம் அணித்துக்கூறி வற்புறுத்தல். [15. வருங்குன்றம்]
இங்ஙனம் தலைவன் எடுத்துரைத்தும் வருத்தம் நீங்காத தலைவிக்கு 'என்னுடைய ஊரில் உள்ள மாளிகைச் சாந்தின் ஒளி வீசி உன்னுடைய ஊரிலுள்ள கரிய மலை வெண்ணிறச் சட்டையிட்டது போலக் காட்டும் அளவுக்கு அண்மையில் எம்மூர் உம் ஊருக்கு அருகில் உள்ளது' எனத் தலைவியிடம் கூறினன்.

16. ஆடிடத்து உய்த்தல் [16. தெளிவளர்]
இங்ஙனம் இருவர் ஊர்களின் அணிமையைக் கூறிய தலைவன் ! 'நீ சென்று உன் ஆயத்துடன் விளையாடுக, நான் கயிலை மலைச் சாரலில் மரச்செறிவில் ஒளிந்து நின்று இங்கு வந்து சேருவேன்' எனத் தலைவியிடம் கூறி அவளை விட்டு அகன்றான்.

17. அருமை அறிதல் [17. புனர்ப்போன்]
அங்ஙனம் அகல நின்ற தலைவன் தலைவி ஆயத்துடன் நிற்றலைக் கண்டு, இவளை இனி எப்படி-நான் அடைய முடியும்; இங்ஙனம் ஆயத்தோடு இருப்பவளைத் தில்லைப் பொழிலில் நான் தனி வரக் கண்டது என்ன மாயமோ, கனவோ இன்னது என்று அறியேன்” என்று தலைவியின் அருமையை நினைத்து வருந்தி நின்றான் .

18. பாங்கியை அறிதல் [18. உயிர் ஒன்று]
ஆயத்துடன் செல்கின்ற தலைமகளைத் தலைமகன் நோக்க, அவள் தன் காதல் தோழியைப் பலமுறை