பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பாங்கற் கூட்டம்

கடைக் கண்ணால் பார்க்கக் கண்டு, 'இந்தத் தோழி போலும் தலைவிக்கு வேண்டியவள் இதுவும் எனக்கு ஒரு துனையாம்’ என உட்கொண்டு அந்தக் காதல் தோழியை அறிந்து கொள்கிறான்.

குறிப்பு: 'க. இயற்கைப் புணர்ச்சி' என்னும் இவ்வதிகாரம் (கிளவிக் கொத்து) மேற்காட்டிய 1. காட்சி முதலான 18 துறைகளேக் கொண்டு முடிகின்றது.

உ. பாங்கற் கூட்டம்

[பாங்கனாற்கூடும் கூட்டம்]

பாங்கற் கூட்டம் என்பது தெய்வப் புணர்ச்சி புனர்ந்த தலைமகன் தன் பாங்கனைக் கொண்டு தலைவியை அடைதல் முறைமை எனக் கொள்ளுதல்.

1. பாங்கனை நினைதல் [19. பூங்கனை] 'தலைவிக்கு அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதல் தோழி எவ்வளவு சிறந்தவளோ அவ்வளவு எனக்குச் சிறந்துள்ள என் பாங்கனை (தோழனை)க் கண்டு நடந்ததை நான் தெரிவித்தால் அந்தத் தலைவியை நான் அடைவதற்க்கு அவன் உதவி செய்வான், அதைத் தடுப்பார் யாருமில்லை' எனத் தலைவன் தன் காதற் பாங்கனை நினைக்கின்றான்.

2. பாங்கன் வினாதல் [20. சிறைவான்] தலைவனுடைய தோள்கள் மெலிந்துள்ளதைக் கண்ட பாங்கன் 'தலைவ! நீ இவ்வாறு மெலிதற்குக் என்ன, தமிழின் துறைகனில் துழைந்து