பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ திருக்கோவையார் உரைநடை

உழைத்தனையோ, அல்லது ஏழிசைச் சூழலிற் புகுந்து உழைத்தனையோ', எனத் தலைவனை வினவுகின்றான்.

3. உற்றது உரைத்தல் (21. கோம்பி)
அங்ஙனம் வினவிய பாங்கனுக்கு, 'நான் ஒரு மடமான் நோக்கியைக் கண்டேன். சிவ பிரானுடைய தாமரைத் தாளைச் சூடும் எனது வலிமை எல்லாம் அவளைக் கண்டதும் நீங்கிற்று; எங்ஙனம் எனில் யானைக்கும் திங்கு செய்யவல்ல வலிய பாம்பு ஒன்றின் படத்தை ஒரு மயில் பிடித்துக் கிழித்தது போல' எனத் தலைவன் பாங்கனுக்கு உற்றது உரைத்தான்.

4. கழறி உரைத்தல் (22. உளமாம்)
உற்றது உரைக்கக் கேட்ட பாங்கன் 'ஒரு இளமான் விழியை உடைய மாதுக்கோ அண்ணலே ! நீ இரங்கியது, இஃது உன் பெருமைக்குத் தகாது' என்று கூறினான்.

5. கழற்றெதிர் மறுத்தல் (23. சேணில்)
இவ்வாறு பாங்கன் சொல்லக் கேட்ட தலைவன் பாங்கனை நோக்கி என் உயிரன்ன பொற் கொழுந்தாம் அந்த மாதை நீ கண்டிலை; கண்டால், இவ்வாறு சொல்லமாட்டாய்; என்றான்.

6. கவன்று உரைத்தல். (24. விலங்கலை)
தலைவன் இவ்வாறு சொல்லக் கேட்ட பாங்கன் 'கடல் கலங்குதலை அடைந்தாலும் கலங்காத நீ.(சிவபிரானுடைய அருள் இல்லாதவர் போல) ஏனோ கலங்கித் துயர் உறுகின்றாய்' எனத் தலைவனை வினவினன்.

7. வலி அழிவு உரைத்தல் (25. தலைப்படு)
இதைக் கேட்ட தலைவன் 'நான் அமைதி அழிந்து உள்ளம் தளரேன், சித்தம் பித்தன் என்று என்னை அறிவாரும் இல்லை; நான் பாரையும் நன்றாகத்