பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் உரைநடை

மயில் போலும் இயலாள், கிளிபோலும் மொழியாள் என்று அவள் தன்மையையும் தலைவன் குறிப்பிட்டான்.

12. வற்புறுத்தல் (30. குயிலை)
இதைக் கேட்ட பாங்கன், 'தலைவி தனது ஆயத்தாருடன் (மலையின் எதிர் ஒலிகேட்டு) விளையாடும் இடத்திற்குப் போய்த் தலைவியைக் கண்டு வருவேன் (அதுவரை நீ பொறுத்திரு) வருந்தாதே' எனத் தலைவனுக்கு வற்புறுத்திக் கூறினன்.

13. குறிவழிச் சேறல் (31. கொடுங்கால்)
அங்ஙனம் தலைவனை வற்புறுத்தி அவன் கூறிய வழியே சென்ற பாங்கன் அந்த வேற்கண்ணி கயிலை வான் பொழிலில் உள்ள புனத்தில் இருப்பாளோ இருக்கமாட்டாளோ என்ற ஐயத்துடன் சென்றான்.

14. குறிவழிக் காண்டல் (32. வடிக்கண்)
தலைவன் சொன்ன குறிவழிச் சென்ற பாங்கன் 'தலைவன் அவளைப்பற்றிக் குறித்த கண், இடை, வாய் எல்லாம் அவன் சொன்னபடியே இருக்கின்றது. ஆதலால் அவன் சொன்ன இடமும் இதுவே; இயலும் இதுவே, அவளும் இவளே; என்று தெளிவுற்றான்.

15. தலைவனை வியந்து உரைத்தல் (33. குவளை)
அப்படித் தெளிவுற்ற பாங்கன் 'இலக்குமியும் அஞ்சும்படியான அவயவ அழகை உடைய இவளைக் கண்டு, இங்கிருந்து அங்கு வந்து இவளைப் பற்றி அத்துணை விரிவாக என்னிடம் உரைத்த என் அண் ண லே திண்ணியான்' என்று தலைவனை வியந்து நின்றான்.

18. கண்டமை கூறல் (34. பணம் தாழ்!)
அங்ஙனம் வியந்த பாங்கன் தலைவனிடம் சென்று தான் அவளைப் பொழிற் புனத்திற் கண்டதைக் கூறினன். (எங்ஙணம் கூறினான் எனில், தன்னைப்