பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க0 திருக்கோவையார் உரைநடை

19. மின்னிடை மெலிதல் (37. ஆவியன்னாய்)
'ஆவியன்னாய் கவலேல்' எனக்கூறி என்னைவிட்டுப் பிரிந்த தலைவர், அரும் சுரத்திலே நீர் வேட்டற்கு உதவும் தாமரைத் தடாகம் போன்ற தலைவர், என் மேல் மிகுந்த ஆசை உடையராய் நெஞ்சழிந்து என் தோழிமார்கள் விளையாடுகின்ற கயிலைத் தாழ்வரையிடத்து அவர்கள் காண வந்திடுவாரோ அல்லது இங்கே வருவாரோ என்ற நினைவுடனே தனியே நின்று தலைவனை நினைத்துத் தலைவி மெலிந்து நின்றனள்.

20. பொழில் கண்டு மகிழ்தல் (38. காம்பிணை)
தலைமகளைக் காணச் செல்லா நின்ற தலைமகன் அவள் இருந்த பொழிலைக் கண்டு பொழிலில் உள்ள வேய் இணைந்து நிற்றலால் அவள் தோள்களை ஒத்தும், அங்குள்ள மயில்களால் அவள் சாயலை ஒத்தும் அங்குள்ள பெரிய நீலமணியால் அவள் கூந்தலை ஒத்தும், அங்குள்ள இளமான் நோக்கத்தால் அவள் விழியை ஒத்தும் இருத்தலாலும், அங்குள்ள கொடிகள் அவள் இடைபோல விளங்குதலாலும், இப்பொழில் என் மனத்துக்கு அவளே எனத் தோன்றி என் மனத்தை இன்புறுத் துகின்றது' என்று அப்பொழிலைக் கண்டு மகிழ்ந்தான்.

21. உயிரென வியத்தல் (39. நேயத்ததாய்)
பொழிலைக் கண்டு மகிழ்ந்த தலைவன் 'என்சிந்தைக் கண்ணதாய், பெரிதும் மாயத்ததாய் இதோ நிற்கின்றது என் உயிர்' எனத் தலைவியைத் தன் உயிர் என வியந்தான்.

22. தளர்வு அகன்று உரைத்தல் (40. தாதிவர்)
தன் உயிர் என வியந்து நின்ற தலைவன் இவர் (தலைவி) பூக்களைக் கொய்யார்' பந்து அடியார், சுனை நீரில் ஆடல் செய்யார், தேவலோகம் பொலிவு அழியத்