பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை

கட்டுரை நூல் வெளிவருகின்றது. இத்தெய்வப் பெற்றி வாய்ந்த அருளாளர்க்கு அகவை எண்பத் தேழு ஆகின்றது. இந்நிலையில் அவர்கள் ஓங்கார வடிவமாகக் காட்சியளிக்கின்றனர். இக்காட்சியினை உலகியல் முறையில் கூறுவோமானுல் கூனிக்குறுகிக் குந்தியிருக்கும் முற்றவமுனிவர் படிவமெனலாம். இந் நிலையில் அவர்கள் ஆற்றிவரும் தவத்தொண்டின் மிக்க சிவத்தொண்டு சொலற்கரிய இறை பணியாகும்.

திருவாசக ஒளிநெறியும், திருவாசக ஒளிநெறிச் கட்டுரையும் தவத்திரு தணிகைமணி ஐயா அவர்கள் நமது கைப்படவே எழுதிக் கழக வழி அச்சிடப்பெற்று வெளிவந்தன. அதன்பின் அவர்கள் உடல்நலங் குன்றிக் கூனிக் குறுகி விட்டமையாலும், கைந் நடுக்கம் ஏற்பட்டுள்ளமையாலும் திருக்கோவையார் ஒளிநெறியையும் ஒளிநெறிக் கட்டுரையையும் தமது கைப்பட எழுத முடியாமல் தாம் சொல்லிப் பிறரைக் கொண்டு எழுத வேண்டியதாயிற்று. அதனால் ஒன்றரை ஆண்டுகளில் எழுதி முடிக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட இரண்டு நூல் கட்கும் மூன்று ஆண்டுகள் ஆயிற்று.

அப்படிச் சொல்லி எழுதும்போது சில வேளைகளில் பேச முடியாத நிலை ஏற்படும். சொல்லுவதை எழுது பவர் விளங்கிக் கொள்ளமுடியாமற் கழிந்த நாட்களும் பல உண்டு. அப்படிச் சொல்லி எழுதப்பட்டவற்றைச் சரிபார்த்துத் திருத்தங்கள் செய்வதோடு பொருள் தலைப்புக்களின் கீழ் அகரவரிசைப் படுத்துவர். சொற்கட்கும் தொடர்கட்கும் கொடுக்கப் பெற்றிருக்கும் பாட் டெண்களை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பர். அங்ஙனமெல்லாம் சரிபார்த்துத் தமக்கு மனநிறைவு ஏற்பட்ட பின் அச்சுக் கோப்பதற்கு அதனைக் கழகத்துக்கு அனுப்பிவைப்பர். கையெழுத்துப் படியும் அதன்கண் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களும் அச்சுக் கோப்பவர்கட்கு நன்கு புரியாதபடி இருப்பதைக் கருதிக் கழக எழுத்தரைக் கொண்டு செவ்வையான மற்றோரு படி எழுதப்.