பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.

சுக்தரமூர்த்தி நாயனுர் அருளிய திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும்

திருத்தொண்டர் வரலாறு

உலகெ லாம்.உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் த டுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

(1) சுந்தரமூர்த்தி காயஞர் வரலாறு

திருக்கயிலா யத்தில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் விளங்கியவர் ஆலாலசுந்தரர். ஒரு நாள் இறைவனுக்குப் பூக்கொய்யச் சென்ருர். அப்போது: உமையம்மையார்க்குத் தொண்டுபுரியும் கமலினி, அநிந்திதை என்னும் மகளிர் இருவரும் பூக்கொய்தல் வேண்டி நந்த வனத்தை அடைந்தனர். இறைவன் அருளால் ஆலால சுந்தரர் அம்மகளிர் இருவரையும் கண்டு காதல் கொண் டாக். 'நீ மாதர்மேல் மனம் வைத்தனையாதலால் அம். மகளிருடன் தென்னுட்டிற் பிறந்து திருமணம் புரிந்து: வாழ்ந்து பின்னர் வருக’’ என இறைவன் பணித்தருளினுர் .

இறைவன் பணித்தவண்ணம் ஆலாலசுந்தரர் திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரில் ஆதிசைவ அந்தணராகிய சடையஞர்க்கும் அவர் மனைவியார் இசைஞானியார்க்கும் மகளுகத் தோன்றினர். நரசிங்க முனையரையரால் வளர்க்கப்பெற்ருர். கலைகள் பல பயின்று திருமணப் பருவம் எய்திய நிலையில் புத்துரர்ச் சடங்கவி சிவாசாரியார் திருமகளை நம்பியாரூரர்க்கு மணம் பேசி முடித்தனர். திருமணம் நிகழும் நிலையில் வெண்ணெய்நல்லூர் இ ைற வர் கிழவேதியராகத் தோன்றி நம்பியாரூரன் எனக்கு அடியவன் என்று அடிமைச்