பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ァ

வாழந்தனர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடி யெடுத்துக் கொடுத்தருள அதனை முதலாகக்கொண்டு நம்பியாரூரர் திருத்தொண்டத் திருப்பதிகத்தினைப் பாடி

அடியார் திருக்கூட்டத்தை வணங்கிப் போற்றினர்.

தேசம் உய்யத் திருத்தொண்டத்தொகை அருளிச் செய்த சுந்தரர் குண்டையூர்க்கிழவர் தமக்கு அளித்த நெல்லைக் கொண்டுவர ஆளிடும்படி கோளிலிப் பெரு மானப் பாடிப் பெற்றர். புகலூர்ப்பெருமான வழிபட்டுச் செங்கல்லே செழும்பொன்னகப் பெற்று வந்தார். திரு முதுகுன்றப்பெருமான் அளித்த பன்னிராயிரம் பொன்னே மணிமுத்தாநதியிலிட்டுத் திருவாரூர்க் கமலாலயக் குளத்தில் எடுத்துப் பரவையாரிடம் கொடுத்தார். குருகாவூரிறைவர் அந்தணராக வந்து பொதி சோறளிக்கப் பெற்றுப் பசி தீர்ந்தார். திருக்கச்சூர் ஆலயக் கோயிலுக்கு நண்பகலிற் சென்றபோது இறைவனே வேதியராய் வீடுதோறும் பிச்சையேற்று வந்து சுந்தரரது பசியைத் தீர்த்தருளினர்.

- திருக்கயிலாயத்தில் சுந்தரராற் காதலிக்கப்பெற்ற அநிந்திதை, சங்கிலியார் என்னும் பெயருடன் தொண்டை நாட்டில் ஞாயிறு கிழவர் என்பார்க்கு மகளாகத் தோன்றி வளர்ந்தார். மணப்பருவம் எய்திய நிலையில் பெற்ருேர் இசைவுடன் திருவொற்றியூரிற் கன்னிமாடத்தில் தங்கி ஒற்றியூர் இறைவர்க்கு மலர்மாலை தொடுக்கும் பணி புரிந்தார். திருவொற்றியூர் இறைவரை வழிபட்ட சுத் தரர் சங்கிலியாரைக் கண்டு காதல் கொண்டு இறைவனரு ளாற் பிரியேன் என மகிழமரத்தடியிற் சபதஞ் செய்து மணம்புரிந்து அவருடன் ஒற்றியூரில் வாழ்ந்தார். சில நாட்கள் சென்றபின் திருவாரூர்ப்பெருமானை வழிபட வேண்டும் என்னும் ஆர்வம் தூண்டச் சபதத்தை மீறி ஒற்றியூரைவிட்டுப் புறப்பட்டார்: தாண்டி யதும் இருகண்களும் பார்வையிழந்தன. வெண்பாக்