பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

கத்தை வழிபடச் சென்றபோது இறைவர் ஊன்றுகோல் கொடுத்தருளினர். காஞ்சியில் திருவேகம்பரைப் பாடி இடக்கண் பெற்ருர். திருத்துருத்தியில் குளத்தில் மூழ்கி உடல்நோய் நீங்கினர். திருவாரூரை மாலைப்பொழுதில் அடைந்து புற்றிடங்கொண்டாரை இறைஞ்சி மீளா வடிமை யுமக்கே யாளாய்” என்னும் பதிகம் பாடி வலக்கண் பெற்ருர், பரவையாரது ஊடலைத் தணித்தற்பொருட்டுத் திருவாரூர்த் தியா கேசப்பெருமானே இருமுறை தூதனுப்பினர். இச்செய்தி கேட்டுச் சினமுற்ற ஏயர்கோன் கலிக்கா மஞர்க்கு ஏற்பட்ட சூலே நோயைத் தணிக்க இறைவரால் அனுப்பப்பட்டு அவருடன் நண்பு பெற்று இருவருமாகத் திருப்புன்கூர்ப்பெருமானே வழிபட்டு மகிழ்ந் தாா.

திருவாரூரில் தம்மைக் காணவந்த சேரமான் பெரு, மாள் நாயனரை வரவேற்று உபசரித்துச் சேரமான் தோழரானர். அவருடன் பாண்டிநாட்டுத் தலங்களை வழிபடச் சென்றபோது மதுரையிற் பாண்டியனும் பாண்டியன் மகளை மணந்து அங்கு விருந்தாய் வந்திருந்த சோழமன்னனும் உபசரிக்கத் தமிழ்வேந்தர் மூவருடன் கூடித் திருப்பரங்குன்றப் பெருமானேப் பாடிப் போற்றினர். திருவாரூர் அடைந்த சுந்தரர் பரவையார் இசைவு பெற்றுச் சேரமான் பெருமாளுடன் மலைநாட்டுக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் காவிரியாறு வெள்ளம்

பெருக்கெடுத்தோடிய நி லை யி ல் இறைவரருளால் வெள்ளத்திடையே வழியுண்டாக ஐயாற்றிறைவரை இறைஞ்சிப் போற்றினர். மலைநாட்டவர் எதிர்

கொண்டு போற்றச் சேரமான் பெருமாளுடன் கொடுங் கோளுரையடைந்து அவரால் வழிபட்டு உபசரிக்கப் பெற்று அவருடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

ஆரூர் இறைவரைக் கண்டு வழிபடவேண்டும் என்னும் ஆர்வம் மேலிட்ட நிலையில் சேரமான் பெருமாள்பால்