பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

அரிதின் விட்ை பெற்று அவர் கொடுத்த நிதிக்குவையுடன் திருமுருகன் பூண்டியிற் செல்லும் வேடர்கள் வழிப்பறி செய்தனர். அதனையறிந்த சுந்தரர் முருகன் பூண்டி இறை வரைப் பதிகம் பாடிப் போற்றிய நிலையில் வேடர்கள் பறித்த பொருள்களைத் திரும்பக் கொடுத்து வணங்கினர்: பின்பு திருவாரூரையடைந்து புற்றிடங்கொண்ட பெரு மான் யிறைஞ்சிப் பரவையார் ம. வளிகை யடைந்து அள ருடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

நம்பியாரூரர் சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளைக் காணும் விருப்புடன் திருவாரூரை விட்டுப் புறப்பட்டார். கொங்கு நாட்டில் புக்கொளியூரின அடைந்: தார். அவ்வூர் மடுவில் முதலையால் விழுங்கப்பட்ட அந்தணச் சிறுவன மீட்டுத் தரும்படி அவிநாசியிறைவரை வேண்டித் திருப்பதிகம் பாடினர். இறைவரருளால் முதலேயால் உமிழப்பட்டு உயிர் பெற்றெழுந்த சிறுவ, னுக்குப் பெற்ருேர் மகிழ உபநயனஞ் செய்வித்தார். சேரமான் எதிர்கொள்ளக் கொடுங்கோளுரை அடைந்த சுந்தரர் அருகேயுள்ள சிவத்தலங்களை வனங்கிச் சேர மானுடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார். ஒருநாள் சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து இறைவரைப் பாடியபோது 'வெறுத்தேன் மணவாழ்க்கையை விட் டொழிந்தேன்’ என உளமுருகிப் போற்றினர். ஆரூரரது பாசப்பிணிப்பை, அகற்றத் திருவுளங்கொண்ட கயிலைப் பெருமான் ஆரூரரைக் கயிலைக்கு அழைத்து வரும்படி தேவர்களுடன் வெள்ளானேயை அனுப்பியருளினர், தேவர்கள் யானையுடன் திருவஞ்சைக்களத் திருக் கோயில் வாயிலில் நின்று இதன்மீதமர்ந்து கயிலைக்கு. வருதல் வேண்டும் என்பது இறைவனது கட்டளை என்றனர். அந்நிலையிற் சேரமான் பெருமாளை நினைத்துக்கொண்டு சுந்தரர் யானைமீதமர்ந்தார். திரு. மஞ்சன சாலேயில் நீராடிக்கொண்டிருந்த சேரமான் அக் குறிப்பினையுணர்ந்து தம் குதிரையின் செவியிலே திருவைந்: