பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

பெறலரும் இளமை பெற்ற அவ்விருவரும் இவ்வுலகில் திருப் பணிகள் புரிந்து பின்பு சிவலோகத்தினையடைந்து பேரின் பம் உற்ருர்கள்.

(4) இய ற்பகை காயஞர்

சோழநாட்டுக் கடற்றுறைப்பட்டினமாகிய பூம் புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயனர். இவர், சிவனடியார் எது கேட் டாலும் இல்லையென்னது வழங்கும் இயல்புடையராய் வாழ்ந்தார். சிவபெருமான், எதனேயும் இல்லே என்னுது சிவனடியார்க்கு ஈயும் இவரது அடியார் பத்தியினை உலகத்தார்க்கு வெளிப்படுத்த எண்ணிக் காமவுணர் வுடைய வேதியராக இயற்பகையார் இல்லத்தை யடைந்தார். 'இல்லையென்னது கொடுக்கும் இயற் பகையாரே, நாம் உமது மனேவியைப் பெறவேண்டி இங்கு வந்தோம்’ என வேதியர் கூறக் கேட்ட இயற்பகை யார் நம்மிடத்தில் உள்ள பொருளையே இவர் கேட் டார்’ என எண்ணி உளம் மகிழ்ந்து அடியாரை வணங்கித் தம் மனேவியை அவர்க்குக் கொடுத்தனுப்பினர், அதனேக் கேட்டுப் பொருத மானமுடைய அவர்தம் சுற்றத்தார் காமுடிக வேதியரைத் தடுத்து எதிர்த்தனராக, இயற்பகை யார் சுற்றத்தார்களை வாளால் வீழ்த்தி வேதியரை மாதினெடு வழியனுப்பிவிட்டு வீட்டிற்குத் திரும்பினர். அந்நிலையில் வேதியராய் வந்த இறைவர் இயற் பகை முனிவா ஒலம், ஈண்டு நீ வருவாய் ஒலம், என ஒலமிட்டழைத்தார். இயற்பகையாரும் இதோ வந் தேன்’ என்று விரைந்து திரும்புமுன், வேதியராய் வந்த இறைவர் மறைந்தார்; விடையின்மீது அம்மையப்ப ராய் விசும்பில் தோன்றக் காட்சியளித்து இயற்பகை நாயனுர்க்கும் அவர் மனேவியார்க்கும் இறந்த சுற்றத் தார்களுக்கும் வீடுபேற்றை நல்கியருளினர்.